இறந்த உடலைப் பெற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மஜக!

ஜூலை.09,
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மயிலாடுதுறையை சேர்ந்த சகோதரரின் உடலை பெற்று அனுப்பி வைக்கும் படி குவைத் மண்டல நிர்வாகிகள் தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் அகமது கபீரை தொடர்புக் கொண்டு கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்து களத்திற்கு விரைந்த மஜகவினர், உறவுகள் அறக்கட்டளையினருடன் இணைந்து மருத்துவமனை அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசினர். விரைவாக உடலை எடுத்து செல்ல தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.

அதனை தொடர்ந்து உறவுகள் அறக்கட்டளை நிர்வாகிகளும் தன்னார்வலர்களுமான சதாம் உசேன், ஆலம்கான் ஆகியோர் உடன் மயிலாடுதுறைக்கு உடலை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தகவல் ;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.