MKP அல் அய்ன் மாநகரம் சார்பாக சிறப்பாக நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி..

மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) அமீரக மண்டலத்தின், அல் அய்ன் மாநகரம் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி அல் அய்ன் மாநகரில் உள்ள அல் தோபாவில் 02-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது .

இதில் அமீரக மற்றும் அல் அய்ன் மாநகர நிர்வாகிகள், உறுபினர்கள் மற்றும் அபுதாபி நிருவாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய கலாச்சார பேரவையின் அமீரக மண்டல செயலாளர் Dr.A.அசாலி அஹமது அவர்கள் தலைமை தாங்கினார்.

அல் அய்ன் மாநகரம் IKP செயலாளர் R.அப்பாஸ் முகமத் அவர்கள் இறைவசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். துணைச் செயலாளர் N.M.பஜ்ருல் ஹக் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். அமீரக ஆலோசகர் S.அப்துல் காதர் அவர்கள் நோன்பின் பண்புகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமீரக ஆலோசகர் J.ஷேக் தாவூத், அமீரக துணைச் செயலாளர் M.முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் S.முஹம்மது இம்ரான் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.