நாகை. ஜூலை.12., இன்று நாகப்பட்டிணம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கோபால், மயிலாடுதுறைநாடாளுமன்ற உறுப்பினர் திரு. பாரதி மோகன், நாகை ட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் V.ராதாகிருஷ்ணன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் உ.மதிவாணன், மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர் மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் அமுல் படுத்தியது குறித்து ஆய்வுகள் மேற்க் கொள்ளப்பட்டன. தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 12.07.2018
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
புதுகை கிழக்கு மாவட்ட MJTS செயலாளர் இல்ல திருமண விழா..! மஜக பொதுச்செயலாளர் நேரில் வந்து வாழ்த்து..!!
புதுகை.ஜூலை.12., புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் தொழிற் சங்கமான #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (#MJTS) மாவட்ட செயலாளர் T.ஷாஜி தீன் இல்ல திருமண விழா நேற்று (11.07.2018) மாலை கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் அழைப்பினை ஏற்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். இதனை அடுத்து பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மஜக துணை பொதுச்செயலாளர் மண்டலம் ஜெய்னுலாப்தீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில பொறுப்பாளர் கோட்டை ஹாரிஸ், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மணமேல்குடி ஒன்றிய செயலாளர் முகம்மது மைதீன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, கோட்டைப்பட்டினம் நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
காஞ்சி வடக்கு மாவட்டத்தில் தமுமுக, மமகவிலிருந்து விலகி ஏராளமனோா் மஜகவில் இணைந்தனா்..!
காஞ்சி.ஜூலை.11., கடந்த 10-07-2018 அன்று அனகாபுத்தூா் மற்றும் பம்மல் பகுதிகளிருந்து தமுமுக, மமகவினா் திரலானோர் பம்மல் A.சௌகத் அலி அவா்களின் தலைமையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளா் #மு_தமிமுன்_அன்சாாி_MLA அவா்கள் முன்னிலையில் இணைந்தனா்.இதில் அம்பேத்காா் நேஷ்னல் காங்கிரஸ் மாநில அமைப்பு செயலாளா் S.முஹமது இஸ்மாயில், மமக பம்மல் நகர தலைவா் C.M.பாஷா, 12.வது வாா்டு செயலாளா் அஜீஸ், மமக நகர வா்தக அணி செயலாளா் M.பீா்முஹமது, அனகை நகர செயலாளா் M.ரஹ்மான், மமக நகர பொருளாளா் S.சலீம், மமக துணை செயலாளா்கள் G.தஸ்தகீா், மமகS.உசேன், மமக D.ரஃபீக், தமுமுக தொழிற்சங்க அணி செயலாளா் M.நாகூா்மீரான், மமக இளைஞா் அணி செயலாளா் G.அஸ்லாம், மமக முன்னால் நகர செயலாளா் S.M.ரஃபீக் ஆகியோா் மஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனா்.இந்த இணைப்பு நிகழ்வில் தலைமை நிா்வாக குழு உறுப்பினா் A.S. அலாவுதீன், மாநில செயலாளா் N.A.தைமியா, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளா் S.ஜிந்தா மதாா், மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளா் பம்மல் சலீம், காஞ்சி மாவட்ட நிா்வாகிகள் ஆலந்தூா் சலீம், தாம்பரம் ஜாகீா் உசேன், பம்மல் அப்துல் காதா், அனகை அப்துல்லா, பம்மல்
திருச்சியில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி..! மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
திருச்சி. ஜூலை.11., திருச்சி எடமலைப்பட்டி புதூரில் AK தம்பியப்பா ராவுத்தர் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா 11.07.18 புதன்கிழமை இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, துணை செயலாளர் ஜம் ஜம் பஷீர், நிர்வாகிகள் மைதீன், அபுபக்கர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING
மணல் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும்! சாஹர் மாலா திட்டத்தில் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாது! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அறந்தாங்கியில் பேட்டி!
அறந்தாங்கி. ஜூலை.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கிக்கு வருகை தந்தார். அறந்தாங்கியில் மஜக சார்பில் 50 மரக்கன்றுகளை நடும் நிகழ்வை தொடங்கிவைத்துவிட்டு, பிறகு அக்னி பஜாரில் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றினால்தான் தீர்வு காண முடியும். மணல் கொள்ளையால் ஆறுகள் செத்துப்போய்விட்டன. நீரோட்டம் தடைப்பட்டிருக்கிறது. இதற்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், இந்தோனிசியா மற்றும் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அங்கு தரமான நிலையிலும், குறைவான விலையிலும் மணல் கிடைக்கிறது. தமிழக அரசு பதினோரு வகையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் மணல் இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டிருக்கிறது. கேரளா அரசு இவ்விசயத்தில் கடைபிடிக்கும் இலகுவான வழிமுறைகளை தமிழக அரசும் பின்பற்ற முன்வரவேண்டும். இதன் மூலம் கட்டுமானத் தொழில் பெரியளவில் வளர்ச்சியடையும். செலவும் குறையும். இதன் மூலம் மணல் கொள்ளையும் கட்டுப்படுத்தப்படும். எனவே இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று மஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மத்திய அரசு சாஹர் மாலா திட்டத்தை செயல்படுத்துவதில் பொறுப்பணர்வு தேவை. மீன்பிடி துறைமுகங்களோ, மீனவர்களின்