அறந்தாங்கி. ஜூலை.11., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கிக்கு
வருகை தந்தார்.
அறந்தாங்கியில் மஜக சார்பில் 50 மரக்கன்றுகளை நடும் நிகழ்வை தொடங்கிவைத்துவிட்டு, பிறகு அக்னி பஜாரில் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார்.
பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க அரசும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், பொதுமக்களும் இணைந்து பணியாற்றினால்தான் தீர்வு காண முடியும். மணல் கொள்ளையால் ஆறுகள் செத்துப்போய்விட்டன. நீரோட்டம் தடைப்பட்டிருக்கிறது.
இதற்கு ஓரளவு தீர்வு காணும் வகையில், இந்தோனிசியா மற்றும் மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதியை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
அங்கு தரமான நிலையிலும், குறைவான விலையிலும் மணல் கிடைக்கிறது. தமிழக அரசு பதினோரு வகையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் மணல் இறக்குமதி செய்வதில் தடைகள் ஏற்பட்டிருக்கிறது.
கேரளா அரசு இவ்விசயத்தில் கடைபிடிக்கும் இலகுவான வழிமுறைகளை தமிழக அரசும் பின்பற்ற முன்வரவேண்டும். இதன் மூலம் கட்டுமானத் தொழில் பெரியளவில் வளர்ச்சியடையும். செலவும் குறையும். இதன் மூலம் மணல் கொள்ளையும் கட்டுப்படுத்தப்படும். எனவே இக்கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று மஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அரசு சாஹர் மாலா திட்டத்தை செயல்படுத்துவதில் பொறுப்பணர்வு தேவை. மீன்பிடி துறைமுகங்களோ, மீனவர்களின் வாழ்வாதாரங்களோ இதில் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.
நாங்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு ஏதிரானவர்கள் அல்லர். மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாகும்.
சேலம்_சென்னை பசுமை வழி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும்போது அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். விவசாயிகள்
எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில், இத்திட்டத்தை மாற்று தடங்களில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்களை அச்சுறுத்தி எதையும் திணிக்க கூடாது.
அகலமான விரைவு சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், இருவழி ரயில் பாதைகள், பெரிய மருத்துவமனைகள், பெரிய கல்வி நிறுவனங்கள், பெரிய பேரூந்து நிலையங்கள், ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதில் மாற்று கருத்தில்லை.
தமிழக அரசு ஆயுள் தண்டணை கைதிகளின் முன் விடுதலையை விரைவுப் படுத்தவேண்டும். பேரறிவாளனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார். இப்பேட்டியின்போது
மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், மாவட்ட துனை செயலாளர்கள் அஜிமீர் அலி, ஒளி முகம்மது, IKP மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட IT விங்க் செயலாளர் அப்துல் ஜமீன், நகர செயலாளர் ஜகபர் சாதிக் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வர்த்தக சங்க தலைவர் வரதராஜன், பொருளாளர் சலீம் ஆகியோர் பொதுச்செயலாளர் அவர்களை சந்தித்து அவரின் சட்டமன்ற பனிகளை பாராட்டி சால்வை அணிவித்தனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்