கோவை:31.ஜுலை. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட அலுவலக திறப்புவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, மற்றும் தலைமை நிர்வாகிகள் முன்னிலையில் தன்னெழுச்சியாக கோட்டைமேடு, கரும்புக்கடை, பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட சகோதரர்கள் மஜக வில் இணைந்தனர். இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், PM.முகம்மதுரபீக், ABT.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 29.07.18
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
யாரும் வரம்பு மீறக்கூடாது! மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவுரை!
கோவை.ஜுலை.30., கோவையில் நடைபெற்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் விதமாக பல அரிய கருத்துகளை கூறி பொதுமக்களின் உள்ளங்களை தொட்டிருக்கிறார். அவர் பேசியதாவது ... இன்று (29.07.18) காலை அமைச்சர் இங்கு வரும் போது செண்டு மேளம் அடித்து வரவேற்றது தேவையற்றது. இனி இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தேர்தல் நேரங்களில் மட்டும் தான் இது போன்ற விஷயங்கள் கூட்டணி கலாச்சாரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து இனி மஜக சொந்தங்கள் செயல்பட வேண்டும். என்னை இளம் காயிதே மில்லத் என அன்பு மிகுதியால் சிலர் சொன்னார்கள். அவரின் புகழ் நிழலில் கூட எங்களால் நெருங்க முடியாது. இது தான் உண்மை. காயிதே மில்லத் தூக்கி ஓடிய ஜோதியை, அப்துல் சமது சாகிபும், பிறகு அப்துல் லத்தீப் சாகிபும் தூக்கி ஓடினார்கள். இப்போது நாங்கள் தூக்கி ஒடுகிறோம். அவர்களது பாடங்களையும் ., செயல்களையும் தான் நாம் பின்பற்றுகிறோம். எனவே எங்களுக்கு புனித பிம்பங்களை போர்த்தாதீர்கள். நாங்கள் சாமானியர்கள். பலம்., பலகீனம், கோபம், சாபம், குறைகள், நிறைகள் கொண்ட சராசரிகள்
மஜக கோவை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா..!
கோவை.ஜுலை.30., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் #SP_வேலுமணி, அவர்கள் மஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA, அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் மத்தியஅரசு #ஹஜ்_மானியத்தை நிறுத்தியதும் உடனடியாக M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் என்னிடத்திலும் முதல்வரிடத்திலும் தமிழக அரசு சார்பில் ஹஜ் செய்யும் பயணிகளுக்கு மானியம் வழங்க கேட்டுக்கொண்டார், அவர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் 6கோடி ரூபாய் வழங்கினார் என அமைச்சர் கூறினார், அதன் பிறகு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், அவை தலைவர் நாசர் உமரி, துணை பொதுச் செயலாளர்கள் சுல்தான்அமீர், சையது அஹமது பாரூக், மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் தைமியா, சீனி முஹம்மது, துணை செயலாளர்கள் அப்துல்பஷீர், புதுமடம் அனீஸ், ஈரோடு பாபு ஷாஹின்சா, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் AS.அலாவுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ்,
சென்னையிலிருந்து புறப்பட்டது முதல் ஹாஜிகள் விமானம்! இதயம் உருக, கண்ணீர் பெருக..!வழியனுப்பு விழா..!!
சென்னை. ஜூலை.29., இன்று சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் வழியாக முதல் #ஹஜ் விமானம் #தக்பீர்_முழக்கத்தோடு புறப்பட்டது. ஹாஜிகள் வழியனுப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மாண்புமிகு #நிலோபர்_கபீல், #ஹஜ்_கமிட்டி தலைவர் ஜப்பார், #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச் செயலாளரும், ஹஜ் கமிட்டி உறுப்பினருமான #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மற்றொரு உறுப்பினருமான டாக்டர் ஹாஜா K.மஜீத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும், விமான நிலைய அதிகாரிகளும் பங்கேற்றனர். புனிதப் பயண ஹாஜிகளே .. உங்கள் நலத்துக்காகவும், நம் நாட்டின் வளத்துக்காகவும் பிரார்த்தியுங்கள்... என்ற பிரார்த்தனையை முழங்கியவாறு #இமாம்_தர்வேஸ்_ரஷாதி அவர்கள் அறிவிப்புகளை செய்தவண்ணம் இருந்தார். ஹஜ் பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கண்ணீர் மல்க கட்டியணைத்து விடைபெற்றனர். கோவையை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது நண்பரை கட்டிப்பித்து அழுதபடியே விடை கொடுத்து தனது அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தியது அங்கு நின்றிருந்தவர்களை ஈர்த்தது. ஏராளமான பயணிகள் தமிமுன் அன்சாரி MLA அவர்களை கட்டிப்பிடித்து தங்கள் நேசத்தை வெளிப்படுத்தினர். தங்கள் பணிகள் சிறக்க புனித மெக்காவில் பிரார்த்திப்பதாகவும் அன்பொழுக கூறினர். ஹஜ் பயணிகள் அனைவரையும் வரவேற்று சென்னை விமான நிலையம் சார்பில் பிரம்மாண்ட தட்டி வைக்கப்பட்டிருந்தது. விமான நிலைய மேலாளர் உள்ளிட்ட உயர்
மஜக தலைவர்கள் தா.பாண்டியன் உடல் நலன் விசாரிப்பு.!
சென்னை.ஜூலை.28., சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள #இந்திய_கம்யூனிஸ்ட்_கட்சி-யின் (#CPI)மூத்த தலைவர் #தா_பாண்டியன் அவர்களை #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #தமிழக_கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் #தனியரசு_MLA, மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீத், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் #ஏ_எஸ்_அலாவுதீன் ஆகியோர் சந்தித்தனர். அனைவரையும் வரவேற்ற தா.பாண்டியன் அவர்கள், நான் நலம் பெற்று வருவேன் என்று உற்சாகத்துடன் பேசினார். பிறகு அங்கு வந்த #தமுமுக பொதுச்செயலாளர் #ஹைதர்_அலி அவர்களை மஜக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை