மஜக கோவை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா..!

கோவை.ஜுலை.30., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் அலுவலக திறப்பு விழா மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக அமைச்சர் #SP_வேலுமணி, அவர்கள் மஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி MLA, அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் மத்தியஅரசு #ஹஜ்_மானியத்தை நிறுத்தியதும் உடனடியாக M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் என்னிடத்திலும் முதல்வரிடத்திலும் தமிழக அரசு சார்பில் ஹஜ் செய்யும் பயணிகளுக்கு மானியம் வழங்க கேட்டுக்கொண்டார், அவர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவர்கள் 6கோடி ரூபாய் வழங்கினார் என அமைச்சர் கூறினார்,

அதன் பிறகு மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா.நாசர், அவை தலைவர் நாசர் உமரி, துணை பொதுச் செயலாளர்கள் சுல்தான்அமீர், சையது அஹமது பாரூக், மன்னை செல்லச்சாமி, ராவுத்தர்ஷா, மாநில செயலாளர்கள் தைமியா, சீனி முஹம்மது, துணை செயலாளர்கள் அப்துல்பஷீர், புதுமடம் அனீஸ், ஈரோடு பாபு ஷாஹின்சா, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் AS.அலாவுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஆனமலை காஜா, முன்னாள் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர் அலி, முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் லேனா இஷாக், கொள்கை விளக்க அணி முன்னாள் மாநில செயலாளர் கோவை நாசர், மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மது ரபீக், ABT.பாருக், சிங்கை சுலைமான், முஸ்தபா, மற்றும் மாவட்ட அணி, பகுதி, நகரம், ஒன்றியம், கிளை, நிர்வாகிகள் திரளாணோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_கோவை_மாநகர்_மாவட்டம்
30.07.18