சென்னை.ஜூன்.20., கடந்த 23.05.2017 அன்று மாடு விற்பனை குறித்தும், இறைச்சிக்காக பசு, ஒட்டகங்கள், எருது, காளை உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்தும் வெளியிட்ட அறிவிப்புகள் நாடெங்கும் கொந்தளிப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விரிவாக பேசி ஆதரவு திரட்டி வந்தார். அவரும் கடந்த 12.06.2017 அன்று சட்டமன்றத்தில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்ற கோரி சட்டமன்றத்தில் மனு கொடுத்திருந்தார். இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் திரு. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர். K.R.ராமசாமி, மஜக சார்பில் M. தமிமுன் அன்சாரி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் உ.தனியரசு, முஸ்லீம் லீக் சார்பில் அபூபக்கர் இப்பிரச்சனையை எழுப்பினர். கருணாஸ் பேச எழுந்த போது அவர் முன்கூட்டியே கடிதம் தராததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி அவர்கள், இது குறித்து வழக்கு நடைபெறுவதால், இம்மாதம் நீதி மன்றத்திற்கு அந்த வழக்கு வருவதாலும் அதன் பிறகு இந்த அரசு, பெரும்பான்மையான மக்களின் முடிவுகளை ஏற்று நடவடிக்கை எடுக்கும் என்றார். தீர்மானம் நிறைவேற்றாவிட்டாலும், குறைந்தபட்சம் இதை கோவா போல
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நீட் மற்றும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக மஜக பொதுச் செயலாளர் சட்டமன்றத்தில் உரை…!
(கடந்த 15.06.2017 அன்று மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA சட்டமன்றத்தில் ஆற்றிய உரையின் மூன்றாம் பகுதி) தமிழகத்தில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அரசு உயர் கல்வியில் பல சாதனைகளை செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு அறிவு தலைநகரமாக மாறி வருவது வரவேற்கதக்கது. தேசிய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 24.5% இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது 24.5% உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்லூரிகளுக்கான NIRF தர வரிசை பட்டியலில், 2017 ஆம் ஆண்டில். தேசிய அளவில் முதல் 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 கல்லூரிகளில் இடம் பெற்றிருப்பது நமக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சாதனைகள் முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் தலைமையில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டலில் பீடு நடை போட வாழ்த்துகிறேன். அதோடு இத்துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்கிறேன். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக, மாண்புமிகு அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது இந்த அவையில் எனது கருத்தை தெளிவாக பதிவு செய்திருக்கிறேன். அதன் பல அம்சங்கள் சமூக நீதிக்கு எதிரானவை. அம்மா அவர்கள் முதல்வராக இருந்த போது தான்
அவர்களுக்காக பிரர்த்திக்கிறோம்…
கோவை நிவாரண நிதி தொடர்பான ஒரு வழக்கில் பேரா. ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட தமுமுக தலைவர்களுக்கு ஓர் ஆண்டு சிறை என தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்தியாகும். அவ்விஷயத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்து, வெற்றி பெறுவார்கள் என நம்புகிறோம். அவர்கள் தைரியத்தோடு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெற்றிபெற இறைவனிடம் பிரர்த்திக்கிறோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி, 19.06.2017
CPM அலுவலகம் தாக்கப்பட்டது மதவெறியின் தொடர்ச்சி! மஜக கண்டனம்…
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை) கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை தொடர்ந்து முன்னெடுத்து வரும் CPM கட்சியின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாத மதவெறி சக்திகள், தங்களது வழக்கமான வன்முறையை கையில் எடுத்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் அரசியல் வன்முறைகள் பெருக இடம் அளிக்க கூடாது. இவ்விஷயத்தில் தமிழக மக்கள் உறுதியான மனநிலையில் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவண், M.தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 18/06/2017
கும்பகோணத்தில் மஜக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி…பொதுச்செயலாளர் பங்கேற்பு…
குடந்தை.ஜூன்.17., தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி குடந்தை தாவூத் மஹாலில் மாவட்ட செயலாளர் சேக்தாவூத் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக சார்பில் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில செயலாளர்கள் நாச்சிகுளம் தாஜுதீன், ராசுதீன், மாநில வர்த்தக அணி செயளாலர் N.E.M யூசுப் ராஜா, தலைமை கழக பேச்சாளர் காதர் பாட்சா, மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், மாவட்ட IKP செயலாளர் அல்லாபக்ஸ், நகர செயலாளர் ஆசாத், தகவல் தொழில்நுட்ப அணி செயலளார் குடந்தை முஹம்மது ரியாஜ் மற்றும் மாவட்ட, அணி , ஒன்றிய , நகர , கிளை நிர்வாகிகளும் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர் அதிமுக சார்பில் நகர செயலளார் இராம.இராமநாதன் Ex MLA மற்றும் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனித நேய ஜனநாயக கட்சி. தஞ்சை வடக்கு. #MJK_IT_WING 17.06.2017