சென்னை.ஏப்.6., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை 47-வது வார்டில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் பணிமனைகளிலும் மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து பிரச்சார வாகனத்தில் திரு டி.டி.வி. தினகரன் அவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MA,MLA (நாகை சட்டமன்ற உறுப்பினர்) மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, மாநில விவசாய அணி செயளாளர் நாகை முபாரக,மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அஹமது ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஹசிம் தலைமையில் R.K.நகர் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் இளைஞர்கள் பெண்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர் தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING R.K.நகர் சட்டமன்ற தொகுதி. 05.04.2017
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக
நாகையில் மறியல் போர்! விவசாயிகளுடன் தமிமுன் அன்சாரி MLA கைது!
நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தொகுதி MLA M. தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டார். முதலில் புத்தூர் அருகில், எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு நாகை திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் மறியல் நடைப்பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். பிறகு தமிமுன் அன்சாரி MLA , தோழர். தனபாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03_04_17
பாதிப்படைந்த பாலத்தை நாகை MLA நேரில் பார்வையிட்டார்!
நாகை. ஏப்.03., நாகப்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2008-ல் கட்டப்பட்டு 2013-ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டார். இன்று காலை (03-04-2017) நேரில் அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்களுடன் பாலத்தை MLA அவர்கள் பார்வையிட்டார். ஒரு மாதத்தில் பாலம் சரிசெய்யப்பட்டு, போக்குவரத்து தொடங்கும் என்று MLA தெரிவித்தார். இதுகுறித்து மேலதிகாரிகளுடன் பேசியிருப்பதாகவும் கூறினார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03-04-2017.
நாகை நகரில் தொகுதி மக்களை சந்தித்து MLA குறைக் கேட்பு…
நாகை.ஏப்.03., நாகப்பட்டினத்தில் நேற்று 02-04-17 சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நகரின் முக்கிய வீதிகளுக்குச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார். கடைத்தெரு,ஆசாத் மார்க்கட், நூல்கடைத்தெரு, யாஹுசைன் பள்ளித்தெரு, நீலா கீழ வீதி,புத்தூர் ரவுண்டானா,ஆகிய நகரின் முக்கிய பகுதிகளுக்கு சென்று தொகுதி மக்களிடம் நேரில் கலந்துரையாடினார். வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்,சிறுகடை வியாபாரிகள், பாதசாரிகள்,ஷாப்பிங் வந்த பொதுமக்ககள், தொழிலாளர்கள் என பலரையும் சந்தித்து பேசினார். அவர்கள் சுட்டிக்காட்டிய விசயங்களை குறிப்பெடுத்துக் கொண்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் MLA அவர்கள் கூறினார்கள். MLA அவர்களை நாகை நகர மக்கள் ஆவலுடன் வரவேற்று,கை குலுக்கி உரையாடியது குறிப்பிடத்தக்கது. இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02_04_17
MF கான் என்னும் மனிதநேயர்…
சென்னை.ஏப்.01., அண்ணா IAS அகாடமியின் முன்னாள் இயக்குனரும் சமூக சேவைகருமான பேரா. MF. கான் அவர்கள் இன்று மரணம் அடைந்தார் (இன்னா லில்லாஹி...) என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது.. பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து ஏராளமான IAS, IPS அதிகாரிகளை உருவாக்கிய சமூக நீதி சிந்தனையாளரை இன்று நாம் இழந்திருக்கிறோம். தனது குடும்ப நிதியில் இருந்து கல்விப் பணிக்காக 1கோடி ரூபாய் தருவதாக கூறி அதற்க்கு சரியான நபர்களை தேடியலைந்தார். அந்தப் பணம் ஏழை எளிய மக்களின் கல்விக்காக நேர்மையாக செலவிடப்பட்ட வேண்டும் என்று நினைத்தார். இது குறித்து பலமுறை என்னிடம் உரையாடிருக்கிறார். அவரது தந்தை தீவிர இடதுசாரி களத்தில் இயங்கியவர் பின் தங்கிய மக்களுக்காக போராடியவர் அதே வழியில் பேரா. MF கானும் இயங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியை தொடங்கிய போது தனது வாழ்த்துக்களை வாயார கூறி மகிழ்ந்தார். கடந்த மார்ச் (2016) மாதம் சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு அவரது கால் அகற்றப்பட்டது. அவரை பார்க்க நானும் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மியும் மருத்துவமனைக்கு சென்றோம். அப்போதும் சமூகத்தை பற்றியும், கல்வி குறித்தும் பேசினார். அப்போது சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. திடீர் என்று அருகில் இருந்த தனது