நாகை. ஜன.06., நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்று 05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சின்னக்கடை வீதியில் நாகை மாவட்ட #ஜமாத்துல்_உலமா சார்பாக பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய அரசின் பாசிச போக்கை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மெளலவி #JS_ரிபாய்_ரஷாதி அவர்கள் பங்கேற்று கண்டன பேருரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரகணக்கோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சகத்துல்லாஹ், ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் அபுசாலிஹ், சாகுல் ஹமீது, ஜமீல், மிஸ்பாஹூதீன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெஹபர் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள்,நகர நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்
நாகப்பட்டிணம்
உள்ளாட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம்..! மஜக நிர்வாகிகள் பங்கேற்பு..!!
நாகை.ஜன.02., நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை சம்பந்தமான கருத்து கேட்பு மற்றும் ஆட்சேபணை தெரிவிக்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்ளும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நாகை_தெற்கு_மாவட்டம். 02.01.2018
நாகை MLA அலுவகத்தில் புத்தாண்டு சந்திப்புகள் !
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொகுதி மக்களும் , அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து , கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 01.01.18
சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:- MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர்
ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை..! தமிழக அரசுக்கு தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கூட்டறிக்கை..!!!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA மூவரும் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை) 10 ஆண்டுகளை கடந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். முன்னாள் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களிடம் இதுப்பற்றி கூறியபோது கனிவுடன் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களிடமும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி சண்முகம் அவர்களிடமும் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அவர்கள் இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில் இன்று (31.12.2017)திண்டுக்கல்லில் நடைபெற்ற MGR நூற்றாண்டு விழாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து ஆயுள் தண்டனை கைதிகளையும், 60 வயதை கடந்த கைதிகளையும் மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வோம் என மாண்புமிகு முதல்வர் திரு.எடப்பாடியார் அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்காக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். கண்ணீரில் வாடிய ஆயிரக்கணக்கான குடும்பங்களிள் வாழ்வில் மாண்புமிகு திரு.எடப்பாடியார்