சென்னை. ஜூன்.30., சட்டசபையில் கடந்த (29-06-2018) தமிழக முதல்வர் எடப்பாடியார் 110 விதிகளின் கீழ் ராமசாமி படையாட்சிக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என அறிவித்தார். அதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவித்து பேசியதாவது. மிக முக்கியமாக தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு முன்னுதரணமாக திகழ்ந்த தலைவர்களில் ஒருவர் பெருமைக்குரிய #ஐயா_ராமசாமி_படையாட்சியார் அவர்கள். வருங்கால தலைமுறை அவரை மறந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நமது முதல்வர் அவர்கள் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காக செயல்படக்கூடிய அத்தனை பேரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஓர் அறிவிப்பாக இருக்கிறது. (மேசை ஒலி அதிர்ந்தது) முதல்வர் 110 விதிகளின் கீழ் அறிவித்த பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA மட்டுமே இதை எழுந்து வரவேற்று பேசினார். இதனால் அதிமுக, திமுக வில் உள்ள வன்னிய சமூக MLA க்கள் அவரை சந்தித்து நன்றி கூறினர். அதன்பிறகு அலைபேசி வாயிலாக பல வன்னிய சமூக பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும், பத்திரிக்கை நண்பர்களும் தங்களது நன்றிகளை கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
நாகப்பட்டிணம்
நாகை மாவட்ட சிறந்த மருத்துவராக வேதாரண்யம் அரசு மருத்துவமனை Dr_Y_அக்பர்_அலிக்கு விருது..! MLAக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி நேரில் வாழ்த்து..!!
சென்னை. ஜூன்.29., நேற்று (28-06-2018) தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக மாநில அளவிலான சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறந்த மருத்துவராக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் #தோப்புத்துறையை சேர்ந்த #Dr_Y_அக்பர்_அலி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மாநிலஅளவில் மிக சிறந்த ஒரு அங்கீகாரம் ; இது நேரிடையாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அலுவலகத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் உயர்ந்த மகுடம். இவ்விருதை பெற்ற டாக்டர் அகபர் அலி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்கு வருகை தந்து, #மனிதநேய_ஜனநாயக_கட்சி பொதுச்செயலாளர் #நாகை_சட்டமன்ற_உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி மற்றும் கொங்கு இளைஞர் பேரவை #உ_தனியரசு_MLA ஆகியோரிடம் நேரில் சந்தித்து வாழ்த்துப்பேற்றார்கள். இச்சந்திப்பில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் டாக்டர் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
நாகையில் பன்னோக்கு விளையாட்டு கூடம் திறப்பு ..!
நாகை. ஜூன்.22., நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில் பன்னோக்கு விளையாட்டு கூடம் கட்டப்பட்டு கடந்த 20.06.2018 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பூப்பந்து, கூடைபந்து, கைபந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளது. மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் #M_தமிமுன்_அன்சாரி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் தேவ் ஆனந்த், B.சிவா, நீச்சல் பயிற்ச்சியாளர்கள் ரஞ்சித்குமார், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #நாகப்பட்டினம் 20/06/2018
நாகையில் மீன்வள பல்கலைகழக திறப்பு விழா..!
நாகை. ஜூன்.20., நாகப்பட்டினத்தில் #மீன்வள பல்கலைக்கழத்தின் நிர்வாக தலைமை அலுவலக கட்டிடத்தை காணொலி மூலம் #முதல்வர்_எடப்பாடியார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி, பல்கலைக்கழக துணைவேந்தர் ஃபிலிக்ஸ், பல்கலைகழக இயக்குனர்களில் ஒருவரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி காட்சியின்போது முதல்வருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும், கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஸ்.மணியன் அவர்களும் பங்கேற்றார். ஆசியாவிலேயே மீன்வளத்திற்கான பல்கலைகழகம் இங்கு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம் #நாகபட்டினம். 20/06/2018
இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி தருமா? சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA கேள்வி?
இன்று சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விவாதம் தொடங்கியது. அப்போது நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி தனது தொகுதி சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பினார். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! எனது தொகுதிக்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலுக்கு திருப்பணிகள் தொடங்கி இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா ? என்று தங்கள் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன். பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்து சமுதாய மக்கள் தங்கள் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்கள். இதற்கான செலவுகளை அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்கள் இறைநம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்து அறநிலையத் துறை சார்பாக அனுமதி மட்டும் தான் வழங்க வேண்டும். அது தாமதம் ஆவதால் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது. இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேள்வி கேட்டதும், சபாநாயகர் அவர்கள் இதற்கு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலளிப்பார் என கூறினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 13.06.18