இன்று சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை விவாதம் தொடங்கியது. அப்போது நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி தனது தொகுதி சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பினார்.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே!
எனது தொகுதிக்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் செளரிராஜ பெருமாள் கோயிலுக்கு திருப்பணிகள் தொடங்கி இவ்வாண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா ? என்று தங்கள் வழியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் கேட்கிறேன்.
பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்து சமுதாய மக்கள் தங்கள் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்துவார்கள். இதற்கான செலவுகளை அந்தந்த ஊரில் உள்ள செல்வந்தர்கள் இறைநம்பிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள். இந்து அறநிலையத் துறை சார்பாக அனுமதி மட்டும் தான் வழங்க வேண்டும். அது தாமதம் ஆவதால் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது.
இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேள்வி கேட்டதும், சபாநாயகர் அவர்கள் இதற்கு மானியக் கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதிலளிப்பார் என கூறினார்.
தகவல்;
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
13.06.18