You are here

மஜக திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பெருநாளை முன்னிட்டு வேஷ்டி சேலை அரிசி விநியோகம்..!

திருப்பூர்.ஜூன்.13. திருப்பூர் மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் #பெருநாள் உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மஜக மாவட்ட செயலாளர் ஹைதர்அலி தலைமை தாங்கினார், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது வரவேற்புரையாற்றினார்.

வெகு சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர்கள்.
B.லியாகத் அலி, மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த
மஜக மாநில பேச்சாளர்
கோவை பாரூக் அவர்கள்
ஈகையில் சிறப்புகள் குறித்து உரையாற்றி வரக்கூடிய காலங்களில் இன்னும் அதிகமாக மக்கள் பயன்பெறும் வகையில் மஜக சார்பில் உதவிகள் வழங்கப்படும் எனக்கூறி வந்திருந்த மக்களுக்கு அன்பளிப்பு பைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்களுக்கு
தலா ஒரு குடும்பத்துக்கு வேஸ்டி, சேலை, அரிசி அடங்கிய அன்பளிப்பு பைகள் வழங்கப்பட்டது.

இதில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் m.காதர்கான், கோவை ரஹமத்துல்லா, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெளஃபில் ரிஸ்வான், மாவட்ட பொருளாளர் ஆசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் i.சாகுல்ஹமீது, தொழிற்சங்க மாவட்ட துணைச்செயலாளர் t.கபீர், மனித உரிமைகள் அணி மாவட்ட செயலாளர் j.செளகத் அலி, மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் பெரிய தோட்டம் அபு, பெரியதோட்டம் செரங்காடு கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட துணைச்செயலாளர் அக்பர் அலி அவர்கள் நன்றியுரையுடன்
நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட அலுவலகத்தில்
(இஃப்தார்) நோன்பு துறக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_மாவட்டம்
13-06_2018

Top