சென்னை.பிப்.10., *மத்திய சென்னை மாவட்டம்* திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதி *மனிதநேய ஜனநாயக கட்சி*யின் ஆலோசனை கூட்டம் 09/02/2017 மாலை இஷா தொழுகைக்கு பிறகு *மாவட்ட செயலாளர்* A.முஹம்மது ஹாலித் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு *மாவட்ட பொருளாளர்* M.Y.பிஸ்முல்லாகான், *மாநில செயற்குழு உறுப்பினர்* M.R.அன்வர் தீன், மாவட்ட துணை செயலாளர் M.H.பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்கள். இந்த கூட்டத்தில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதியின் பொருப்புக்குழு கலைக்கப்பட்டு *புதிய பகுதி நிர்வாகிகள்* ஏகமனதாக *தேர்வு* செய்யப்பட்டனர். *பகுதி செயலாளர்* P.M. பஷீர் அஹமது B.sc., *பகுதி பொருளாளர்* R.அசன் *பகுதி துணை செயலாளர்கள்* 1) A. சலீம் அலி 2) முஹம்மது சல்மான் 3) இஷாக் மேற்கண்ட புதிய நிர்வாகத்திற்கு மாநில தலைமை அங்கீகாரம் வழங்க *மாவட்ட செயலாளர்* வாயிலாக உரிய முறையில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது... தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT-WING) மத்திய சென்னை. 09.02.2017
Author: admin
சிறைவாசிகள் மீதான தொடரும் வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் மஜக பங்கேற்பு!
பிப்.09., கடலூர் மத்திய சிறையில் தொடரும் சிறைவாசிகளின் மீதான வன்முறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 07-02-2017 அன்று காலை கடலூரில் நடைபெற்றது. இதில் மனித உரிமைகளுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி மனித உரிமைகள் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமைக்கழக பேச்சாளார் கடலூார் S.மன்சூர், மஜக மாவட்ட செயலாளர் நெய்வேலி N.இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி P. ஷாஜகான் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மஜக மாவட்ட மீனவர் அணி செயலாளர் யூசப், நெல்லிக்குப்பம் மஜக நகர செயலாளர் அப்துல் பாஸித் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல் மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கடலூர் மாவட்டம் 08-02-2017
சற்று முன் மஜக புதிய தலைமையகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பொது செயலாளர்!
பிப்.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய தலைமையகத்தில் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் அழைத்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். உடன் பொருளாளர் S.S.ஹாருன் ரசிது, தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா நாசர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் மற்றும் துறைமுகம் பகுதி நிர்வாகிகள். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி(MJK IT-WING) மத்திய சென்னை மாவட்டம். 09.02.17
வேலுர் மாநகர மஜகவின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை
பிப்.09., நேற்று 08.02.17 மனிதநேய ஜனநாயக கட்சியினர் வேலூர் மாநகரில் பல வார்டுகளில் குப்பைகள் தூர்வாரப்படாத சூழலை தொடர்ந்து மாநகராட்சியின் 2 & 3 ஆகிய மண்டல அதிகாரிகளிடம் குப்பைகளை துர்வாரக்கோரி புகார் அளிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக இன்று காலை 30 வது வார்டில் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றியும், குப்பை கொட்டும் இரும்பு தொட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். எனவே மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். *களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி* தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (MJK IT-WING) வேலூர் கிழக்கு மாவட்டம். 09.02.2017.
இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி முப்பெரும் விழா காணும் கோவை மஜக
பிப்.08., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் தெற்கு பகுதியின் ஆலோசனை கூட்டம் இன்று 08/02/2017 மாலை 7-மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் *அப்பாஸ்* அவர்கள் தலைமையேற்க, பொருளாளர் *நிவாஸ்,* துணை செயலாளர்கள் *காஜா, ஜக்கிரியா, ஜெமேஷா* மருத்துவ அணி செயலாளர் *யூசுப்* இளைஞர் அணி செயலாளர் *ஜாபர்,* மனிதநேய ஜனநாயக தொழிற் சங்க செயலாளர் *சிராஜ்* ஆகியோர் முன்னிலை வகித்தனர். *இக்கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* 1) வரும் *பிப்ரவரி 28* அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி *சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மஜக கொடி ஏற்றுவது* எனவும். 2) பிப்ரவரி 28 அன்று *இலவச மருத்துவ முகாம்* நடத்துவது எனவும். 3) பகுதிகள் முழுதும் தீவிர *உறுப்பினர்கள் சேர்க்கை* நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பகுதி, கிளை, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி (MJK IT WING) கோவை மாநகர் மாவட்டம் 08/02/2017