சென்னை. மார்ச்.21., இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து, பணி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்தனர். இது குறித்து உடனடியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பணியாளர்களிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமிம் அகமது உடனிருந்தார். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, சென்னை. #MJK_IT_WING 21.03.2017
Author: admin
ஆந்திர எல்லை அருகில் வேலூர் (மே) மாவட்டம் கொள்ளப்பள்ளியில் மஜக கிளை உதயம்…
வேலூர்.மார்ச்.21., தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைக்கு அருகில் வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக புதிய கிளை நேற்று உதயமானது. நேற்று குடியாத்தம் ஒன்றியம் கொள்ளப்பள்ளியில் மஜக ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய துணை செயலாளர் முபாரக், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இஸ்மாயில் குடியாத்தம் நகர பொருளாளர் முபாரக், துணை செயலாளர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் S.M.D நவாஸ் மற்றும் மாவட்ட மருத்துவ அணி பொருளாளர் SM.நிஜாமுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாராக கலந்துக்கொண்டு மஜகவின் பணிகள் குறித்து விளக்கினார்கள், கொள்ளப்பள்ளி பைரோஸ் பாஷா, அஷ்ரப் அலி நிஜாமுதீன் ஆகியோர் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர் இதில் கொள்ளப்பள்ளியை சார்ந்த இளைஞர்கள் ஆர்வமாக கலந்துக்கொண்டு அனைவரும் தங்களை மஜகவில் இணைந்துக்கொண்டார்கள். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, வேலூர் மேற்கு மாவட்டம். #MJK_IT_WING 21.03.2017
திரு.டிடிவி தினகரனை சந்தித்து மஜக தலைவர்கள் வாழ்த்து…
சென்னை,மார்ச்.21., அஇஅதிமுகவின் துணைப் பொது செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.டிடிவி. தினகரன் அவர்களை அதிமுகவின் துணைப் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதற்கும், ஆர்.கே.நகர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்கள். இச் சந்திப்பில் மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி.MLA, தலைமையில், பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது M.com, தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், இணைப் பொது செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், NA. தைம்மியா, சாதிக் பாட்ஷா, திருப்புவனம்.ராசுதீன் ஆகியோரும் சந்தித்தனர். இச் சந்திப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்ததாக பொது செயலாளர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, தலைமையகம். #MJK _ IT_WING 21.03.2017
காயல்பட்டினத்தில் சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்தித்து மஜக மனு…
தூத்துக்குடி,மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு KC.கருப்பணன் அவர்களிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விளக்கிக்கூறினார். அதனை தொடர்ந்து அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அவருடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M.தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம். 20.03.2017
காயல்பட்டிணம் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்ட விரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மஜக MLA விடம் கோரிக்கை மனு…
தூத்துக்குடி, மார்ச்.20., காயல்பட்டிணம் கடற்கரையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடத்தை அகற்றக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் சந்தித்து பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MA MLA அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அவருடன் மாநில பொருளாளர் S.S ஹாரூன் ரஷிது மாநிலச் செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் உடன் இருந்தனர். இம்மனுவை காயல்பட்டணத்தை சார்ந்த தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் N.M தமிமுல் அன்சாரி, மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் K ராஸிக் முஸம்மில் ஆகியோர் காயல்பட்டிணம் நகரத்தின் சார்பாக கோரிக்கை மனுவை வழங்கினார்கள் தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING தூத்துக்குடி மாவட்டம் 20.03.2017