தூத்துக்குடி.ஜூன்.27., நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தானில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. மானங்காத்தான். தூத்துக்குடி (வ) மாவட்டம். 25.06.2017
Author: admin
இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக கடலங்குடியில் ஃபித்ரா வினியோகம்…!
மயிலாடுதுறை.ஜூன்.26., நேற்று நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், No.02, கடலங்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வு முன்னாள் மாவட்ட துணை செயலாளர் A.J.சாகுல் ஹமிது, ஒன்றிய துணை செயலாளர் நிசார் அஹமது, கிளை பொருப்பாளர்கள் மரைக்கான் என்கிற சாகுல் ஹமீது, சாகுல் ஹமீது, ஷாஜஹான், பாபு, ஆசிக் ஆகியோர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. கடலங்குடி நாகை(வடக்கு) மாவட்டம். 25.06.2017
தமிமுன் அன்சாரி MLA உடன் ஏனங்குடி கேதாரிமங்களம் ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பு…!
நாகை. ஜூன்.25., நேற்று கேதாரிமங்களம் ஜமாத்திற்க்கு வருகைப்புரிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்களை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்தனர். பிறகு புத்தாகரம் ஊராட்சிக்குட்ப்பட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனை மின் விளக்கு, குப்பைதொட்டி, மையவாடி சுற்றுச்சுவர் போன்ற பிரச்சினைகளை கோரிக்கையை வைக்கப்பட்டது. உடனடியாக சம்மதப்பட்ட அதிகாரிகளை தொடர்புக்கொண்டு பணிகள் நடைபெற பேசினார். உடன் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், மஜக மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன், மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கதலி, மாவட்ட துனை செயலாளர் யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப்தீன், ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர்ரஹ்மான் மற்றும் குவைத் மண்டல துணை செயலாளர் முஹம்மது பாசில் ஆகியோர் உடன் இருந்தனர் தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. நாகை தெற்கு மாவட்டம் #MJK_IT_WING 24.06.2017
இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக காயல்பட்டினத்தில் ஃபித்ரா வினியோகம்…!
தூத்துக்குடி.ஜூன்.25., நேற்று காயல்பட்டினத்தில் மனித நேய ஜனநாயக கட்சியின் மார்க்கப் பிரிவான இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஃபித்ரா வினியோகம் செய்யப்பட்டது. இதில் மஜக-வின் மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அகமது மீரா தம்பி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. காயல்பட்டினம் தூத்துக்குடி (தெ) மாவட்டம். #MJK_IT_WING 24.06.2017
ஈகையும், அன்பும் ஓங்கட்டும் ! மஜக ரமலான் வாழ்த்து !
( மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாழ்த்துச் செய்தி) முஸ்லிம்களின் இருபெரும் பண்டிகைகளில் ஒன்றான ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் உலகம் எங்கும் இருவேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது . சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி , சூரியன் மறையும் வரை 30 நாட்கள் நோன்பிருந்து , அதிகமாக இறைவழிபாடுகளில் ஈடுபட்டு, தேடி வரும் ஏழைகளுக்கு வாரி வழங்கி ரமலான் மாதத்தின் நிறைவாக நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகிறது . உள்ளங்களில் ஆன்மீக எழுச்சி, செயல்களில் பயிற்சியும் , அணுகுமுறைகளில் பயிற்சியும் ரமலான் தரும் பரிசுகளாகும் . இந்நன்னாளில் சகோதர சமுதாய மக்களோடு அன்பையும் , விருந்தோம்பலையும் பகிர்ந்துக் கொண்டு , நல்லிணக்கம் மேலும் , மேலும் வளர பாடுபட உறுதியேற்போம் . உலகமெங்கும் அன்பும் , அமைதியும் , மானுட ஒற்றுமையும் தழைத்தோங்கவும் , வறுமையும் , துயரமும் மறைந்து மகிழ்ச்சி பெருகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம் . அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் எனும் ரமலான் நல்வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் . M. தமிமுன் அன்சாரி