சென்னை.ஜூலை.18., 'NEET' தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, இதுவரை 3 முறை பேசியுள்ளார். ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் தோழர்.பிரின்ஸ் கஜேந்திரன் தலைமையில் பல்வேறு மாணவர் இயக்க பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து சட்டமன்ற விடுதிக்கு வந்து பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்தனர். அப்போது தனியரசு MLA வும் இருந்தார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவ, மாணவிகள் தங்கள் இரத்தத்தால் வரைந்த கண்டன சுவரொட்டியை அவரிடம் காட்டினர். 'நீட்' தேர்வில் ஏற்படும் பாதிப்புகளை விவரித்தனர். முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். மாணங்களின் உணர்வுகளுக்கு மஜக துணை நிற்கும் என பொதுச்செயலாளர் கூறினார். அவர்களுடன் மாணவர் இந்தியாவின் பிரதிநிதிகளும் வருகை தந்தனர். தகவல்; மஜக தகவல் தொழில் நுட்ப அணி, #MJK_IT_WING சென்னை. 18.07.17
Author: admin
மஜக பொதுச் செயலாளர் வாக்களித்தார்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று குடியரசு தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தார். இன்று காலை இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அகமது, விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக் ஆகியோருடன் சட்டமன்றம் சென்றார். வழக்கமான வெள்ளை ஆடைகளுடன் செல்லாமல், கலர் ஆடைகளுடன் வந்ததும், அமைச்சர்களும், MLA க்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் அவரை பார்த்து 'தமாஷ்' செய்தனர். ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை, எங்கப்பா தமிமுன் அன்சாரி? என்று சொல்லிவிட்டு, மாணவர்கள் வாக்களிக்கக்கூடாது? இது உங்களுக்கு தெரியுமா? என கிண்டலடித்தார். பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் விஜயதரணி MLA, தமிமுன் அன்சாரியை பார்த்து 'நான் யாரென்று குழம்பிட்டேன்' என்று கூறிவிட்டு, வாக்கு சாவடிக்கு அழைத்துப் போனார். அங்கு அதிமுக மற்றும் காங்கிரஸ் MLA க்கள் அவரை வரவேற்று ஜாலியாக பேசினர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே இந்த முடிவு? மற்றப்படி எங்களை விட்டும் போக மாட்டீர்களே என உரிமையுடன் கேட்க, காங்கிரஸ் MLA க்கள் அதற்கு ஜாலியாக பதிலளித்தனர். பிறகு வாக்களிக்க அவர் உள்ளே வந்ததும், புகைப்பட கலைஞர்கள் படத்திற்கு 'போஸ்' கொடுக்க கூற கேமராக்கள் மின்னின. பிறகு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை
M.தமிமுன் அன்சாரி MLA-வை பாராட்டிய பொதக்குடி ஜமாஅத்தார்கள்…
திருவாரூர்.ஜுலை,17: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MA, MLA அவர்கள் பொதக்குடி ஊர் உறவின் முறை முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளை நேற்று சந்தித்து உரையாற்றினார். தமிழக சட்டமன்றத்தில் பள்ளிவாசலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதை பற்றி சட்டமன்றத்தில் பேசியதற்க்காக பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் மாட்டு பிரச்சினை, ஜனாதிபதி ஒட்டு ஆகியவற்றைக்கும் பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் மகிழ்ச்சி நிறைந்த பாராட்டுகளை தெரிவித்தனர். அதுசமயம் பொதக்குடிக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்து தர தயராக இருப்பதாக கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 16.07.2017
மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!
கோவை.ஜூலை.17.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், TMS.அப்பாஸ், அணி நிர்வாகிகள் பைசல், சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட அணிநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வணிகர்சங்க மாவட்ட (MJVS) செயலாளராக GM.நகர் அக்பர் 9943140189 வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக பாதுஷா 9994334123 சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளராக முஹம்மதுசலீம் 9487760053 மருத்துவ அணி மாவட்ட செயலாளராக அபு 99621122421 துணை செயலாளராக செய்யது இப்ராஹிம் 9944969177 இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்களாக சபீர் 9786766228 அக்பர் 9943454224 பிரோஸ் 9940700076 ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK IT WING கோவை மாநகர் மாவட்டம் 16.07.2017
சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்!
#நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்! #நாகூர்_தர்ஹா சொத்துக்களை கண்டறிய வேண்டும்! #சட்டமன்றத்தில் எதிரொலித்த நாகப்பட்டினம் தொகுதி கோரிக்கைகள்! (#மஜக_பொதுச்_செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்களின் சட்டமன்ற உரை- பகுதி 4) பேரவை தலைவர் அவர்களே ... #மீன்வள_பல்கலைக்கழகம் நாகப்பட்டினம் தொகுதியில் கட்டப்பட்டு வரும் மீன்வள பல்கலைக்கழகத்தை விரைவில் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். #அரசு_மருத்துவமனை நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு DNP அந்தஸ்து தர வேண்டும். நாகப்பட்டினம் மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டுமென்ற எனது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் . (DNP அந்தஸ்து கிடைத்தால் மருத்துவர்கள் பற்றாக்குறை தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தொடரின் போது MRI ஸ்கேன் வசதிகள் உள்பட 9 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே) #துறைமுகம் நாகப்பட்டினம் துறைமுகத்தை தனியார் பங்கேற்போடு பசுமைத் துறைமுகமாக ரூ.350 கோடிக்கு தரம் உயர்த்தி செயல்படுத்தப்படும் என்று அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது விதி 110-ன் கீழ் அறிவித்தார்கள். எனவே , அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் . #தனி_தாலுக்கா திருமருகலை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டுமென 30 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் . அதை தனி தாலுக்கா வாக