மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று குடியரசு தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தார்.
இன்று காலை இளைஞர் அணி செயலாளர் ஷமீம் அகமது, விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக் ஆகியோருடன் சட்டமன்றம் சென்றார்.
வழக்கமான வெள்ளை ஆடைகளுடன் செல்லாமல், கலர் ஆடைகளுடன் வந்ததும், அமைச்சர்களும், MLA க்களும், எதிர்கட்சி உறுப்பினர்களும் அவரை பார்த்து ‘தமாஷ்’ செய்தனர்.
ராதாபுரம் அதிமுக MLA இன்பதுரை, எங்கப்பா தமிமுன் அன்சாரி? என்று சொல்லிவிட்டு, மாணவர்கள் வாக்களிக்கக்கூடாது? இது உங்களுக்கு தெரியுமா? என கிண்டலடித்தார்.
பிறகு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஏஜெண்ட் விஜயதரணி MLA, தமிமுன் அன்சாரியை பார்த்து ‘நான் யாரென்று குழம்பிட்டேன்’ என்று கூறிவிட்டு, வாக்கு சாவடிக்கு அழைத்துப் போனார்.
அங்கு அதிமுக மற்றும் காங்கிரஸ் MLA க்கள் அவரை வரவேற்று ஜாலியாக பேசினர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தானே இந்த முடிவு? மற்றப்படி எங்களை விட்டும் போக மாட்டீர்களே என உரிமையுடன் கேட்க, காங்கிரஸ் MLA க்கள் அதற்கு ஜாலியாக பதிலளித்தனர்.
பிறகு வாக்களிக்க அவர் உள்ளே வந்ததும், புகைப்பட கலைஞர்கள் படத்திற்கு ‘போஸ்’ கொடுக்க கூற கேமராக்கள் மின்னின.
பிறகு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜனநாயகம் பண்மை கலாச்சாரம் கொண்டது. அதன் முதல் குடிமகனை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு புதிய அனுபவம் என்றார்.
வெளியே வந்ததும் அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைக்குழுக்கி பேசிக்கொண்டிருந்தனர். பாண்டேவுடானான தந்தி T.V பேட்டி நன்றாக இருந்ததாக அருகிலிருந்த அதிமுக MLA க்கள் பாராட்டினர்.
அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் K.R ராமசாமி MLA மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களும் M.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து நடப்பு அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசினர்.
அதுபோல் திமுக வின் திண்டுக்கல் I.பெரியசாமி, பிச்சாண்டி உள்ளிட்டவர்களும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
இவை யாவற்றையும் கவனித்த பத்திரிக்கையாளர்கள் ‘நீங்கள் ஒருவர்தான் அனைவருடனும் நல்லுறவை மெயின்டேன் பன்றீங்க சார்’ என்று பாராட்டினர்.
தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்பஅணி
#MJK_IT_WING
சென்னை.
17.07.17