சென்னை.ஜூலை.17: இன்று மாலை 5 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் வருகை தந்தார். அவரை சால்வை அணிவித்து பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி வரவேற்றார்.
அவருடன் காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சிகளின் சார்பில் தமிழ்நாட்டுக்கு நியமிக்கப்பட்ட குடியரசு தலைவருக்கான தேர்தல் பொறுப்பாளர் மது கொட் யாக்ஸி, சட்டமன்ற குழு தலைவர் K.R.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், மலேசிய பாண்டியன், காங்கிரஸ் அந்தமான்-நிக்கோபர் பொறுப்பாளர் நவீன், காங்கிரஸ் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜசேகர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
மஜக சார்பில் மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் பல்லாவரம் ஷபி, மாநில இளைஞரணி செயலாளர்
ஷமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் நாகை. முபாரக், மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன், மாணவர் இந்தியா செயலாளர் அஸாருதின், பொருளாளர் ஜாவித், தலைமைக் கழக பேச்சாளர் பூவை.அப்துல் காதர், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முகம்மது ஹாலிதின், பொருளாளர் பிஸ்மில்லாகான், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜிந்தா மாதர், துணைச் செயலாளர் ஜாஹீர் உசேன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், துணைச் செயலாளர் பக்ருதீன், வேலுர் மேற்கு மாவட்ட செயலாளர் வஸீம் அக்ரம், பைசான் உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.
பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பேசிய மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி, ‘ஜனநாயகம் காக்க’ மஜக குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவளித்ததாகவும், அதற்கு நன்றி கூறி திருநாவுக்காசர் வந்திருப்பதாகவும் கூறினார்.
பிறகு பேசிய திருநாவுக்கரசர் அவர்கள், குடியரசு தலைவர் தேர்தலில் மஜக எடுத்த துணிச்சலான முடிவை பாராட்டினார். இதற்காக பொதுச்செயலாளருக்கும், மஜக தலைவர்களுக்கும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி சார்பில் நன்றி கூற வந்திருப்பதாகவும் கூறினார்.
தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்பஅணி
#MJK_IT_WING
மத்திய சென்னை மாவட்டம்.
17.07.17