நாகை. ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் நிதி வளர்ச்சிக்காக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாகப்பட்டினத்தில் தொழிலதிபர் ஜனாப் மெய்தின் அவர்களை சந்தித்து, அவரிடம் நன்கொடை பெற்று இத்திட்டத்தை பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடங்கி வைத்தார். துண்டு பிரசுரத்தை தலைமை ஒருங்கினைப்பாளர் மெளலா M.நாசர் அவர்கள் வழங்கி, ரசீதையும் அவரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநிலச் துனைச்செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லாஹ் , மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக் ஆகியோர் பங்கேற்றனர். நாகை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நாகை நகர நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல் : மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING நாகை தெற்கு மாவட்டம் 01.08.2017
Author: admin
காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.ஆக.01., கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட்-15 சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. நேற்று இந்நிகழ்விற்கு அழைப்பு கொடுப்பதற்காக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், சிங்கை சுலைமான் ஆகியோருடன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், துணை செயலாளர் பிரோஸ், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். இதில் காவல்துறை ஆணையர், துணைஆணையர், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசு மருத்துவமனை RMO மற்றும் இரத்தவங்கி அதிகாரிகளை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்!!! தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT _WING கோவை மாநகர் மாவட்டம் 31.07.17
வடகரையில் புதிய பேருந்து நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA திறந்துவைத்து, மரக் கன்றுகள் நாட்டுவைத்தார்கள்
நாகை. ஆக.01., நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வடகரையில் புதிய பேருந்து பயணிகள் நிழலகத்தை நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் திறந்து வைத்தார். பிறகு பேருந்து நிழலகம் அருகில் மரக்கன்றுகளை நட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக திருமருகல் ஒன்றிய செயலாளர் ஆர்.இராதாகிருட்டிணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் ஆகியோர் உடன் இருந்தனர். பிறகு வடகரை கிளை சார்பாக கழக கொடியை புதிய பேருந்து நிழலகம் அருகிலும், தென்கரை பாலம் அருகிலும் கழக பொதுச் செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர் எம்.தமிமுன் அன்சாரி MA.MLA அவர்கள் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மஜக நாகை மாவட்ட பொருளாளர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர் முன்சி யூசுப், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி முஹம்மத் யூசுப் தீன், தொகுதி செயலாளர் தம்ஜிதீன், திருமருகல் ஒன்றிய செயலாளர் எ.முஜிபுர் ரஹ்மான், குவைத் மண்டல துணை செயலாளர் எம்.முஹம்மத் பாசில் கான், மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சித்திக் அவர்களும் மற்றும் ஏனங்குடி, வவ்வாலடி, கோட்டூர், வடகரை கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, நாகை மாவட்டம். #MJK_IT_WING
மஜக கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் !!
கோவை.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், இஸ்லாமி யகலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அனீபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் பாதுஷா, வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் சலீம், EBR.இப்ராஹீம் மற்றும் அனைத்து பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன ஆகஸ்ட் 13.08.17அன்று பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் நடைபெறும் கொடியேற்று விழாவில் அதிகமான மக்கள் கலந்துகொள்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15. 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 71 யூனிட் இரத்ததானம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது, ஆகஸ்ட்15 அன்று கோவை மாவட்ட மருத்துவ அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் மாபெரும் மருத்துவமுகாம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம் 30.07.17
காயல்பட்டினம் மஜக நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தூத்துக்குடி.ஆக.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டிணம் நகர ஆலோசனை கூட்டம் கடந்த 30.07.2017 மாலை 5 மணியளவில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர நிர்வாகிகள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக செயற்குழு உறுப்பினர் அகமது மீரா தம்பி அவர்கள் கலந்து கொண்டு புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார். தீர்மானங்கள்.. #எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி இரத்ததானம் செய்வது. வரும் 19 ம் தேதி மாவட்டத்திற்கு வருகை தரும் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் அவர்களை வைத்து நகர, கிளைகள் சார்பாக கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்ச்சி மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING தூத்துக்குடி (தெற்கு) 30.07.2017