வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் Ex MP அவர்கள் , மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சால்வை அணிவித்து மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார். அவருடன் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் யூசுப், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர். அரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின் போது மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் , மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் , மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை.முபாரக் , நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் , வேதை நகரச் செயலாளர் சேக் அகமதுல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேதை நகரம் நாகை தெற்கு மாவட்டம் 13.08.2017
Author: admin
இளையான்குடி நகரில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..! மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது துவக்கிவைத்தார்கள்..!!
சிவகங்கை.ஆக.13., மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் 12.08.17 சனிக்கிழமையன்று நடைபெற்றது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் மஜக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இளையான்குடி நகர மஜக சார்பில் பேருந்துநிலையம், பொதுமக்கள் கூடும் இடம், ஆட்டோ நிறுத்தம் மற்றும் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார், பேருந்து மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு தேடி சென்று நிலவேம்பு கசாயத்தை மஜக மாநில பொருளாளர் வழங்கினார்கள். நகர செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சிக்கந்தர் பாட்ஷா, இஸ்லாமிய கலாச்சார பேரவை குவைத் மண்டல செயலாளர் சீனி முஹம்மது ஆகியோருடன், நகர துணைச் செயலாளர்கள் செய்யது மஹபூப், சிராஜ் அஹமது, ஜமால் முஹம்மது, ஜஹபர் சாதிக்,
மஜக பொதுச்செயலாளர் இல்லத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள்..!
வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP அவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார்கள். அவருக்கு சால்வை அணிவித்து மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார். அவருடன் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் குத்தாலம் லியாக்கத் அலி, தாஹா உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர். 1 மணி நேரம் நடைபெற்ற இச் சந்திப்பின் போது மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.M.நாசர் , இணைப் பொதுச் செயலாளர் மைதீன் உலவி , மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் , மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் , நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சேக் மன்சூர் மற்றும் வேதை நகரச் செயலாளர் சேக் அகமதுல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேதை நகரம், நாகை தெற்கு மாவட்டம். 12.08.2017.
தூத்துக்குடியில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மஜக மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு…!
தூத்துக்குடி.ஆக.13., இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக 12.08.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனிதா ராதாகிருஷ்னன் MLA அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் அவர்களும், மாவட்ட பொருளாளர் அ.நவாஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் எதிர்வரும் 16.08.2017 புதன்கிழமை காலை 10மணிக்கு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி (தெற்கு) மாவட்டம். 12.08.2017
மஜக மாநில நிர்வாகிகளை இளையான்குடி ஹமீதியா பள்ளி நிர்வாகிகள் சந்திப்பு..!
சிவகங்கை.ஆக்.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் இளையான்குடி நகர அலுவலகத்தில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது அவர்களையும், மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா. நாசர் அவர்களையும், இளையான்குடி ஹமீதியா மேல்நிலைப் பள்ளியின் சிறந்த கல்வியாளரும் தாளாளருமான ஹாஜி.சேக்தாவூத் அவர்களும், தலைமையாசிரியர் பெரியசாமி அவர்களும், பள்ளி நிர்வாகிகள் புரோஸ்கான் மற்றும் தமீம் அவர்களும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பள்ளியின் கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினார்கள். இந்த சந்திப்பின் போது மஜக மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், நகர் செயலாளர் உமர் கத்தாப், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், நகர் துணைச் செயலாளர் செய்யது மஹபுப், சிராஜுதீன் அஹமது, ஜகுபர் சாதிக், உஸ்மான் ஆகியோர் உடனிருந்தார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING சிவகங்கை மாவட்டம். 11.08.2017.