மஜக பொதுச்செயலாளர் இல்லத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் வருகை…

image

image

image

வேதை.ஆக.13., தோப்புத்துறை ஆரிபா இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் Ex MP அவர்கள் , மஜக பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சால்வை அணிவித்து மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்.

அவருடன் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில பொருளாளர் யூசுப், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளச் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகளும் வருகை தந்தனர்.

அரை மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின் போது மஜக மாநில துணை பொதுச் செயலாளர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் , மாநில துணைச் செயலாளர் சேக் அப்துல்லாஹ் , மாநில விவசாய அணிச்செயலாளர் நாகை.முபாரக் , நாகை தெற்கு மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதீன் , வேதை நகரச் செயலாளர் சேக் அகமதுல்லாஹ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
வேதை நகரம்
நாகை தெற்கு மாவட்டம்
13.08.2017