சென்னை.அக்.06., புதிய பார்வை பத்திரிக்கை ஆசிரியரும், தமிழ் தேசிய உணர்வாளருமான அண்ணன் திரு.நடராஜன் அவர்களின் உடல் நலம் குறித்து, சகோதரர் T.T.V.தினகரன் அவர்களிடம் அழைப்பேசியில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கேட்டறிந்தார். தற்போது, அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி வருவதாகவும், ICU சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் தினகரன் கூறினார். அவர் நலம் பெற வாழ்த்துவதாகவும், அவரது உடல் நலம் தேறியதும் நேரில் வந்து பார்ப்பதாகவும் பொதுச் செயலாளர் கூறினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி. #தலைமையகம்_சென்னை 06.10.17
Author: admin
பொதக்குடி மஜக சார்பில் மூன்றாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.அக் 06,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மூன்றாவது நாளாக பொதக்குடி மேலப்பள்ளி மற்றும் பாத்திமா பள்ளி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர் தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 06/10/2017
புதிய ஜமாத்துல் உலமா தலைவருக்கு மஜக வாழ்த்து!
(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி) ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலானா மௌலவி பி.ஏ.காஜா முஈனுதின் பாகவி அவர்களின் பணிகள் சிறக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலவி v.s. அன்வர் பாதுஷா உலவி, PhD, அவர்களுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாயத்தின் தாய் அமைப்பாக திகழும் ஜமாத்துல் உலமா, சமுதாயத்தின் உயிர் நாடி பிரச்சனைகளில் சங்கைக்குரிய உலமா பெருமக்களை களத்தில் இறக்கி ஆற்றி வரும் பணிகள் சிறப்பானவை. சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், நாட்டு நலன் ஆகிய விவகாரங்களில் புதிய நிர்வாகிகள் தலைமையில் ஜமாத்துல் உலமா சபை சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்களுடன் #M_தமிமுன்_அன்சாரி_MLA, பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 06.10.17.
பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குக! மஜக வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட தொகையை பெறுவதில் குழப்பம் நீடித்து வருகிறது. இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நாகை மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டப் பகுதிகளில், நிலத்தடி நீர் இல்லாததால் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுமையாக காய்ந்து போய் இருக்கின்றன. இது போன்ற பகுதிகளில் "விளைச்சலில் இழப்பு" என்பதன் அடிப்படையில், காப்பீடு என்பது அநேக பகுதிகளில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு கிராமங்கள் வாரியாக காப்பீட்டு தொகை வழங்குவதில் பாகுபாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, வருவாய் தீர்ப்பாய சட்டத்தின் அடிப்படையில் 51 சதவீதத்திற்கும் மேல் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழு பாதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில், 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் பேச வேண்டும். இது குறித்து சிறப்பு காப்பீட்டிற்கான மாவட்ட அளவிளான கூட்டதை (DLMC) கூட்டி உடனடியாக பாகுபாடு இன்றி காப்பீடு வழங்க பரிந்துரை
பொதக்குடி மஜக சார்பில் இரண்டாவது நாளாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி..!
திருவாரூர்.அக்.04,. பொதக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கிளை செயலாளர் ஜமால் முகம்மது தலைமையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று இரண்டாவது நாளாக பொதக்குடி மற்றும் சேகரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிலமேம்பு கசாயம் கொடுத்து சிறப்பித்தனர் இதில் ஏலமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவாரூர்_மாவட்டம் 04/10/2017