(மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் வாழ்த்து செய்தி)
ஜமாத்துல் உலமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலானா மௌலவி பி.ஏ.காஜா முஈனுதின் பாகவி அவர்களின் பணிகள் சிறக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மௌலவி v.s. அன்வர் பாதுஷா உலவி, PhD, அவர்களுக்கும், பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்களுக்கும் எமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமுதாயத்தின் தாய் அமைப்பாக திகழும் ஜமாத்துல் உலமா, சமுதாயத்தின் உயிர் நாடி பிரச்சனைகளில் சங்கைக்குரிய உலமா பெருமக்களை களத்தில் இறக்கி ஆற்றி வரும் பணிகள் சிறப்பானவை.
சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், நாட்டு நலன் ஆகிய விவகாரங்களில் புதிய நிர்வாகிகள் தலைமையில் ஜமாத்துல் உலமா சபை சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வாழ்த்துக்களுடன்
#M_தமிமுன்_அன்சாரி_MLA,
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
06.10.17.