ஆக.03.,நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நிலைமையை சமாளிக்கும் வகையில் நகராட்சி சார்பாக டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மக்களின் தேவைக்கு முழுமையாக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நகராட்சி தலைவர் திருமதி. மஞ்சுளா சந்திரமோகனிடம், நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி கலந்துரையாடினார்.
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இது குறித்து உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அவர்களை M. தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் 50 லட்சம் கனஅடி நீர் நாகை தொகுதியில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 18 லட்சம் கனஅடி நீர் தான் கொடுக்கப்படுகிறது.
குழாய்கள் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த நீரிலும் குறைவு ஏற்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திட்டப்படி 50 லட்சம் கனஅடி நீர் கிடைக்க ஆவணம் செய்யும்படியும் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து துரிதமாக முயற்சிகள் மேற்கொள்வதாக அமைச்சர் வேலுமணி, சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினார்.
தகவல் வெளியீடு: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 03.08.16