விவசாயத்துறை தொடர்பான 110 அறிவிப்புக்கு மஜக பொதுச்செயலாளர் வரவேற்பு…

(இனி விவசாயிகளின் நெல் கொள்முதல் பணிகள் மின்னனு சேவையாக மாற்றப்படும் இதன் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்களின் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு விவசாயிகளின் நேரம் சேமிக்கப்படும் அனைத்து விபரங்களும் ஒளிவு மறைவின்றி இணையத்தில் வெளியிடப்படும் SMS மூலம் விவசாயிகளுக்கு தகவல் பரிமாறப்படும் இது போன்ற பல்வேறு விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்களை 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் சட்ட மன்றத்தில் அறிவித்தார் அதனை வரவேற்று மஜக பொதுச்செயளாலர் M_தமிமுன் அன்சாரி MLA பேசினார்)

#அவரது_உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே…

இன்றைய தினம் இந்த பேரவையிலே, மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிறார்கள். அதை பாராட்டி வரவேற்கிறேன்.

தமிழ்நாடு வளம் பெற வேண்டும் என்பதற்காகவும், தமிழ் சமுதாயம் நலம் பெற வேண்டும் என்பதற்காகவும் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் 110 விதியின் கீழ் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

மக்கள் நலனுக்கான அறிவிப்புகளை குறுக்கீடு இன்றி அறிவிப்பதும், அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதும், செயல்படுத்திய திட்டங்களை மக்களின் பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வருவதும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

நோக்கம் தெளிவாக இருக்கும்போது, அதன் தாக்கம் உறுதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எல்லா மாநில அரசுகளும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட திட்டமிடுகிறார்கள். ஆனால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட வேண்டும் என திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் 110 விதியின் கீழ் மாண்புமிகு முதல்வர் அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை பாராட்டுகிறேன் நன்றி.

நாடெங்கிலும் விவசாய நிலப்பரப்பு  குறைந்து வருவதாகவும், விவசாயம் செய்யும் தொழிளாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதனால் எதிர்காலத்தில் உணவு உற்பத்தி குறைந்து விடும், உணவுப் பஞ்சம் ஏற்ப்பட்டுவிடும் என்றும் கவலையான செய்தி உலா வரும் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் அதற்க்கு வாய்ப்பில்லை என்பதை உறுதிபடச் சொல்லும் வகையில்; விவசாயத்தை பாதுகாக்கும் வகையிலும்; விவசாயிகளின் நலன்களை மேம்படுத்தும் வகையிலும்; விவசாய உற்பத்தி பொருள்களை எளிதில் சந்தைபடுத்தும் வகையிலும்; விவசாயத்துறையின் வளர்ச்சியை நவீனப்படுத்தும் வகையிலும்  மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமைந்திருக்கின்றன.

ஆசியாவில் உணவு உற்பத்தியிலும், நவீன விவசாய முறையிலும் தாய்லாந்து சிறப்பான வளர்ச்சியை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் தாய்லாந்தாக தமிழ்நாடு வேளாண்துறையில் திகழும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

தகவல்: நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம்