ஆக.03.,நேற்று வனத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,பல மத கடவுள்களோடு முதல்வர் அவர்களை ஒப்பிட்டு பேசினார்.அதுபோல நபிகள் நாயகத்தையும் ஒப்பிட்டு பேசினார்.அப்போது முதல்வர் அவையில் இல்லை.
உடனே முஸ்லீம் லீக் உறுப்பினர் அபூபக்கரும்,மஜக உறுப்பினர் தமிமுன் அன்சாரியும் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து சபாநாயகரிடம் ஆட்சேபனையை தெரிவித்தனர்.
அந்த ஆட்சேபனையை ஏற்று அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் கூறினார்.பிறகு அவை முடிந்ததும் அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் அப்படி சொல்வது தவறு என்றும் ,அதை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது என்றும் விளக்கியதும்,அமைச்சர் அதை புரிந்துக் கொண்டு தன் தவறை ஏற்றுக் கொண்டார்.
இவ்விஷயத்தில் கூட்டணி அரசியல் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அபூபக்கரும்,தமிமுன் அன்சாரியும் இணைந்து செயல்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறையாகும்.
தகவல் :மஜக ஊடகபிரிவு