தஞ்சை.ஜனவரி.17..,
இன்று தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக எழுச்சி மாநாடு நடைப்பெற்றது.
ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பனியிலும் ஆர்வத்தோடு திரண்டிருந்தனர்.
மாநாட்டில் கலைக்குழுவின் முழக்கங்களை ஆதரித்து, செல்போன் லைட்டின் வெளிச்சம் பாய்ச்சி மக்கள் தங்களிள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இதில் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாலர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், உ.பி.மாநில காவல்துறை, போராடிய மக்களுக்கு எதிராக நடத்திய வன்முறையை அரச பயங்கரவாதம் என்று சாடினார்.
இந்த கறுப்பு சட்டங்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானது என்பதை புரிய வைக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை என்றவர், இதை இந்துக்கள், கிறித்தவர்கள், தலித்துகளிடம் வீடு, வீடாக சென்று சந்தித்து விளக்க வேண்டும் என்றார்.
அனைத்து தரப்பு வெகு மக்களையும் இதில் பங்கெடுக்க செய்ய வேண்டும் என்றும், ஏனெனில் இது இந்தியாவை பாதுகாக்க நடைபெறும், அமைதி வழியிலான இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றார்.
நாளை முதல் கிராமம், கிராமமாக வீதி, வீதியாக மக்களை சந்திக்க வேண்டும். அதுவே இப்போராட்டத்திற்கு இனி கூடுதல் வலு சேர்க்கும் என்றார்.
எமது ஜனநாயக கோரிக்கைகள் நிறைவேறும் வரை அமைதி வழி போராட்டம் தொடரும் என்றவர் இதில் சமரசம் என்பது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருச்சி வேலுச்சாமி, திருமுருகன் காந்தி, மதுக்கூர் ராவுத்தர்ஷா, நிஜாம், பழனி.பாரூக் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
மஜக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அப்துல் சலாம், தஞ்சை மாநகர மாவட்டச் செயலாளர் அஹ்மது கபீர் உள்ளிட்ட திரளான மஜக-வினரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சைதெற்குமாவட்டம்
17-01-2020