கர்நாடகா.நவ.30., பெங்களூரு, பாகலூர் மஜக கிளை டிசம்பர் 2 நடைபெறும் டிசம்பர் 6 போராட்டம் சமபந்தமன் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு பாகலூர் கிளை செயலாளர் சகாப் தீன் அவர்கள் தலைமை தாங்கினார். பாகலூர் கிளை பொருளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் கூட்டத்தில் டிசம்பர் 2 செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வது, மற்றும் டிசம்பர் 6 ஒசூரில் நடைபெறும் இரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தில் கர்நாடகா மஜக சார்பாக திரளான மக்களை திரட்டி கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் J.சல்மான் பெங்களூரு மாநகர பொருளாளர், S.B.S சாகுல் அமீது, A.அக்கிம் சேட் பெங்களூரு மாநகர துணைச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK_KARNATAKA
Author: admin
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி செயல்வீரர்கள் கூட்டம்..!
கோவை.நவ.30., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிணத்துக்கடவு பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர், காதர், துணை செயலாளர்கள் அபு, ஹாருண் ரஷீது, மற்றும் பகுதி, கிளை கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.. இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை திரட்டுவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.11.17
நாகை துறைமுக கேப்டனிடம் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு! துறைமுக மேம்பாடு குறித்து கேட்டறிந்தார்!
நாகை. நவ.30.,நேற்று (29.11.17) நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்ஷா அவர்களை சந்தித்து புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார். முதலாம் எண் கூண்டு, இரண்டாம் எண் கூண்டு, மூன்றாம் எண் கூண்டு என 10 வரைக்கான விளக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டறிந்தார். வானிலை மையமும், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் இணைந்து தகவல்களை பரிமாறிய பிறகே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவதாக அங்கிருந்த அதிகாரிகள் விளக்கமளிந்தனர். பிறகு நாகை துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தற்பொழுது தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பாமாயில் கப்பல்களில் இறக்கப்படுவதாக கூறினார்கள். துறைமுக செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்தும், துறைமுகத்தை மேம்படுத்துவதும் குறித்தும் திட்ட அறிக்கைகளை தருமாறும், இது குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி நடவடிக்கைகளை மேம்படுத்த துணை நிற்பதாகவும் M.தமிமுன் அன்சாரி MLA, அதிகாரிகளிடம் கூறினார். சட்டமன்றத்தில் நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது குறித்து அவர் மூன்று முறை பேசியுள்ளதும், முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் அவர் நேரில் வலியுறுத்தியதும் குறிப்பிடதக்கது. தகவல்: #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 30.11.17
கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக மீனவரணி செயலாளர் பங்கேற்பு..!!
சென்னை.நவ.30. ,வடசென்னை மாவட்ட கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் அவர்கள் பங்குபெற்று கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் வட சென்னை S.A.அஸிம், வடசென்னை நகர , கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வடசென்னை_மாவட்டம்
மஜக கத்தார் புதிய கிளை (Sanaya12) உதயம்..!
கத்தார்.நவ.29.,மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக கடந்த 25.11.2017 அன்று மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணைச் செயலாளர் K.M.பஷீர் அஹமத் தலைமையில் Sanaya 12ல் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை உருவாக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மண்டல பொருளாளர் ஆயங்குடி யாசீன், மண்டல துணை செயலாளர் சகாப்தீன், மண்டல PRO வாஜீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மஜக மாநில அவைத் தலைவர் நாசிர் உமரி அவர்களும் கலந்து கொண்டு எதிர்கால செயல் திட்டங்களை விளக்கினார். கீழ்கண்ட நிர்வாகிகள் தேந்தெடுக்கப்பட்டனர். கிளைச் செயலாளர்: தாரிக் மதுக்கூர் +97430939026 கிளை பொருளாளர்: பாபு மயிலாடுதுறை +97455349865 கிளை துணைச் செயலாளர்கள்: ஜியா முத்துப்பேட்டை +91 9965859538, அப்துல்லாஹ் அறந்தாங்கி +97430737838, உறுப்பினர்கள்: 1.ஜாஃபர் கும்பகோணம் +97477332120, 2. கலீல் நெல்லை +97477145666, 3.முஜீப் மயிலாடுதுறை + 974 66314204, 4.சர்ஃபுதீன் மயிலாடுதுறை +974 3015306, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறோம். தகவல்: #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை, #MKP_கத்தார்_மண்டலம். 29.11.2017