நாகை. நவ.30.,நேற்று (29.11.17) நாகப்பட்டினம் துறைமுக அலுவலகத்திற்கு வருகை தந்த நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் துறைமுக அலுவலர் கேப்டன் ஜோ.மானேக்ஷா அவர்களை சந்தித்து புயல் எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார்.
முதலாம் எண் கூண்டு, இரண்டாம் எண் கூண்டு, மூன்றாம் எண் கூண்டு என 10 வரைக்கான விளக்கங்களையும், செயல் முறைகளையும் கேட்டறிந்தார்.
வானிலை மையமும், மாவட்ட கலெக்டர் அலுவலகமும் இணைந்து தகவல்களை பரிமாறிய பிறகே புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படுவதாக அங்கிருந்த அதிகாரிகள் விளக்கமளிந்தனர்.
பிறகு நாகை துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தற்பொழுது தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பாமாயில் கப்பல்களில் இறக்கப்படுவதாக கூறினார்கள்.
துறைமுக செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்தும், துறைமுகத்தை மேம்படுத்துவதும் குறித்தும் திட்ட அறிக்கைகளை தருமாறும், இது குறித்து தமிழக அரசுடன் தொடர்ந்து பேசி நடவடிக்கைகளை மேம்படுத்த துணை நிற்பதாகவும் M.தமிமுன் அன்சாரி MLA, அதிகாரிகளிடம் கூறினார்.
சட்டமன்றத்தில் நாகை துறைமுகத்தை மேம்படுத்துவது குறித்து அவர் மூன்று முறை பேசியுள்ளதும், முதல்வரிடம் தனிப்பட்ட முறையில் அவர் நேரில் வலியுறுத்தியதும் குறிப்பிடதக்கது.
தகவல்:
#நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம்.
30.11.17