You are here

கோட்டைப்பட்டினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLAவுக்கு வரவேற்பு!


ஏப்.02,
கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை வளாகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கொள்கை முடிவுக்கு வாழ்த்து கூறி, சால்வை அணிவித்து வரவேற்பு செய்தனர்.

அவர்களிடம் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அறந்தாங்கி தொகுதி காங். வேட்பாளர் S.T. ராமச்சந்திரன் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சம்பந்தமாக மஜக பொதுச்செயலாளர் கேட்டறிந்தார்.

மேலும், கூட்டணி நிர்வாகிகள் தேர்தல் தினத்தன்று அதிகாலையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவுகளை துரித படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

இதில், மஜக மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி, மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி சலாம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
01.04.21

Top