
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி எதிர் வருகின்ற17.04.2023 அன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்விற்கு அழைப்பு விடுக்க பா.ம.க சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ஷேக் மைதீன் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர் முஹம்மது அஸாருதீன் அவர்களை நேரில் சந்தித்து நிகழ்விற்கு அழைப்பு விடுத்தார்.
உடன் பாமக சென்னை மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் புதுப்பேட்டை ஷேக், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துர்ரஹ்மான், இளைஞரணி பொருளாளர் ஃபைசல், வடசென்னை ரஃபி ஆகியோர் உடனிருந்தனர்.