
மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் தன்னெழுச்சியாக மஜக-வில் இணைந்து வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர் மாவட்ட மஜக சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தில் (MJTS) “ஆட்டோ தொழிலாளர்கள்” மஜக மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி அவர்கள் முன்னிலையில் தன்னெழுச்சியாக தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியின் கொள்கையை IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாநில இளைஞரனி துணை செயலாளர் PMA.பைசல் ஆகியோர் எடுத்துரைத்தனர்.
MJTS மாவட்ட செயலாளர் M.P.ஜாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக மாவட்ட நிர்வாகிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.