You are here

கோவை மஜக இஃப்தார்… மக்கள் எழுச்சியுடன் நடைபெற்ற ஒன்றுகூடல்….

இன்று கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

போத்தனூர் ரோட்டில் அமைந்துள்ள வசந்தம் மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி முழுவதும் மஜக-வின் தோரண கொடிகள் கட்டப்பட்டு உற்சாகமாக இருந்தது.

5 மணியிலிருந்தே பல்வேறு பொறுப்புகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குழுமினர்.

6 மணியிலிருந்து தொண்டர்களும், அழைப்பினை ஏற்று பலரும் வந்த வண்ணமிருந்தனர்.

அரங்கின் தரைப்பகுதி நிரம்பி, முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்திலும் மக்கள் நிறைந்தனர்.

மஜக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அனைவரையும் ஓடி ஓடி உபசரித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளில் இங்கு மஜக நடத்திய இஃப்தார் நிகழ்ச்சிகளில் இதுதான் மிகப்பெரிய அளவில் மக்கள் பங்கேற்ற நிகழ்வு என பலரும் பாராட்டினர்.

நிகழ்வுக்கு கூட்டமைப்பு தலைவர் இனாயத்துல்லா ஹாஜியார் வருகை தந்திருந்தார்.

இவர் கடந்த பிப்ரவரி 28 அன்று தஞ்சையில் “மஜக பிரதிநிதிகள் சங்கமம்” நிகழ்ச்சிக்கு மருத்துவ காரணங்களால் வர முடியவில்லை. எனவே இந்நிகழ்ச்சிக்கு எப்படியும் வந்துவிடுவேன் எனக் கூறி அதுபோலவே கலந்துக் கொண்டார்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இசாக், இளைஞரணி மாநில துணை செயலாளர் பைசல், திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோட்டை செல்லப்பா, முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நிசார், intj மாவட்ட செயலாளர் சபீர், தேசிய லீக் மாவட்ட செயலாளர் கிதர் முஹம்மது, இஸ்லாமிய அழைப்பாளர் கோவை M.ஜெய்னூல் ஆபீதின் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வுக்கு வந்த பலரும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் தென்கிழக்காசிய பயணத்தில் கிடைத்திருக்கும் ஆதரவு குறித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இஃப்தாருக்கு பிறகு நடைபெற்ற விருந்தோம்பல் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

வந்தோம், கலைந்தோம் என்றில்லாமல் மஜக-வை வலிமைப்படுத்துவது குறித்து ஒவ்வொருவரும் அக்கறைக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட செயலாளர் மீன் அப்பாஸ் தலைமையிலான நிர்வாகத்தோடு உற்சாகமாக செயல்படுங்கள் என பலரும் கூறினர்.

Top