You are here

மங்கலம்பேட்டையில்… மஜக இஃப்தார் நிகழ்வு..!

இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை நகரம் சார்பாக “இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு” நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி பங்கேற்று சிறப்பித்தார்.

அவருடன் மாவட்ட மேலிட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான நெய்வேலி இப்ராஹிம் அவர்களும் பங்கேற்றார்.

இதில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இணை பொதுச் செயலாளர் பேசியதாவது…

குர்ஆனில் தொழுகைக்கு அடுத்ததாக இறைவன் ஜகாத்தை (தர்மத்தை) பற்றி தான் இறைவன் பேசுகின்றான்.

இறைவனுக்கான வணக்கம் என்று தொழுகையைச் சொன்னால், மனிதர்களின் நலன் பேணுவதையும், அவர்கள் மீது அக்கறை செலுத்துவதையும் மையப்படுத்தி தான் தர்மத்தை நமக்கு இறைவன் சுட்டிக் காட்டுகின்றான்.

ஜகாத்தின் (தர்மத்தின்) அடுத்த அந்தஸ்தில் தான் நோன்பை கூட இறைவன் வைத்துள்ளான்.

இதிலிருந்து மனிதர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்துவது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நமக்கு மார்க்கம் இதன் மூலமாக சொல்கிறது.

அதைத்தான் மனிதநேய ஜனநாயக கட்சியும் முன்னெடுத்து வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பெயரே “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” தான்.

இதில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் அல்லாதவர்களும் இங்கு கலந்து கொண்டுள்ளோம்.

முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் வழிபாட்டு முறைகளில் வேறாக இருந்தாலும், வாழ்க்கை முறையில் நாம் இணைந்தே வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நோக்கம்.

அந்த இலக்கில்தான் மஜக-வும் பயணிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வை மாவட்ட பொருளாளர் A.ரியாஸ் ரஹ்மான், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் முசரப், தலைமை செயற்குழு உறுப்பினர் OAK.நூர் முகம்மது, மாவட்ட துணை செயலாளர் A.சையது அலி, இளைஞரணி செயலாளர் U.முஸ்தாக், மாணவர் இந்தியா செயலாளர் இய்ரான், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, நகர செயலாளர் ஷேக், நகர பொருளாளர் R.முகம்மது அஸார், நகர துணை செயலாளர் முகம்மது பாரீஸ், நகர இளைஞரணி செயலாளர் T.அம்ர்தீன், மாணவர் இந்தியா நகர செயலாளர் T.அப்ருதீன் ஆகியோர் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Top