
மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தென்கிழக்காசிய நாடுகளில் நல்லெண்ண சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக புருணே தாருஸ்ஸலாம் நாட்டுக்கு நேற்று வருகை தந்தார்.
இன்று பெர்பி என்ற இடத்தில் Wafa hotel-லில் மனிதநேய சொந்தங்களின் ஏற்பாட்டில் ‘இஃப்தார் -நோன்பு துறப்பு ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் புருணேயில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
அனைவரையும் சுதீன் (எ) மிஸ்பாகுதீன் வரவேற்றார்.
இஃப்தார் விருந்துக்கு பின்பு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
அதில் தாயகத்திற்கு வரும்போது, சிங்கப்பூர், மலேசியா வழியாக சுற்றிக்கொண்டு வருவதால் நேரம், பணம் வீணாவதாக பலரும் கூறினர்.
புருணே – திருச்சிக்கு இடையே சனிக்கிழமை தோறும் வாரம் ஒருமுறை விமான சேவை வழங்க மஜக சார்பில் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், ஒன்றிய அரசிடம் மஜக சார்பில் வலியுறுத்தப்படும் என்றும், தீவிர தொடர் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உறுதியளித்தார்.
கலந்துரையாடலின் போது, உங்களின் சம்பாத்தியத்தை உரிய வகையில் பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொண்டார்.
‘முதலீட்டுக்கு மாதம் தோறும் அதிக லாபம் தருகிறோம்’ என விளம்பரம் செய்யும் நிறுவனங்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
உங்கள் பிள்ளைகளை உயர்கல்வி பயில வழிகாட்டுங்கள் என்றவர், ஆஸ்திரெலியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைத்தால் குடும்பத்துடன் அங்கு அவர்களை குடியமர்த்த திட்டமிடுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
நிகழ்வை மனிதநேய சொந்தங்கள் அம்பகரத்தூர் ஜாகீர் உசேன், நாகூர் தாஹா, கோபாலபட்டினம் யாகூப் உசேன், நீடூர் ஹாஜி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.