
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டம் நாகூர் நகரம் சார்பாக “இதயங்களை இணைக்கும் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு” நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் முன்சி யூசுப்தீன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்.
அவருடன் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில இளைஞரணி செயலாளர் ஹமீது ஜெகபர் ஆகியோரும் பங்கேற்றனர்.
மேலும் நாகை நகர மன்ற துணை தலைவர், நகர திமுக செயலாளர் R.செந்தில்குமார், முத்துமாரியம்மன் கோவில் சிவாச்சரியார் N.கார்த்திகேயன், மவ்லவி மக்சூத் சாஹிப், காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவ்ஷாத், நாகூர் காவல் துணை ஆய்வாளர் S. இங்கர்சால், சமூக ஆர்வலர்கள் சித்திக், கல்லார் ரபிக், மற்றும் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், வணிகர் சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய ‘புயலோடு போராடும் பூக்கள் ‘ என்ற நூல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு சமூக நல்லிணக்க சந்திப்பாக இருந்ததாக பலரும் கூறினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, மாணவர் இந்தியா தஞ்சை மண்டல செயலாளர் நிசாத், தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர்கள் பாலமுரளி, பேபி ஷாப் (எ) பகுருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் மாலிக், நாகை ஒன்றிய செயலாளர் மஞ்சை சதாம், நாகூர் நகர செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் சௌக்கத் அலி, நகர துணை செயலாளர் முகம்மது யாசர், முஹம்மது ஹாஜி சரிபு, முஹம்மது நசீர் ஹீசைன், தினேஷ், IT Wing நகர செயலாளர் முஹம்மது இஸ்மாயில், திட்டச்சேரி பேரூர் செயலாளர் இப்ராஹிம், புறக்கிராமம் கிளை பொறுப்பாளர் பக்கர், மஞ்சக்கொல்லை கிளை பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.