
உழைப்பாளிகளின் உலகத் திருநாளான மே தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
8 மணி நேர வேலை ஒழுங்கு, உழைப்புக்கேற்ற ஊதியம், ஊதியத்திற்கேற்ற உழைப்பு, சுரண்டலுக்கு எதிரான போராட்டம், கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கு மாற்று என தொழிலாளர் சமூகத்தின் போராட்டங்கள் நீடிக்கிறது.
இவற்றில் வெற்றிபெறும் நோக்குடனும், தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் தொடர்ந்து களமாட உறுதியேற்போம்.
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாளர் தோழர்களுக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்;
மு.தமிமுன் அன்சாரி
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
30.04.2023