திருப்பூர் மஜக சேவைகள்… ரமலான் உதவி பொருட்கள் வினியோகம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஏழை, எளியோருக்கு ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி அடங்கிய ரமலான் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.04.2023) மாலை மாவட்ட செயலாளர் P.M.இக்பால் தலைமையில் CTC டிப்போ அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மஜக தலைமை ஒருங்கிணைப்பாளர் சையத் அகமது ஃபாரூக, மாநில செயலாளர் கோவை ஜாஃபர் அலி, திமுக-வின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கா.செல்வராஜ் MLA., மாநகர மேயர் நா.தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கா. செல்வராஜ் MLA., அவர்கள் உரையாற்றும் போது… மனிதநேய ஜனநாயக கட்சியின் பணிகளைத் தொடர்ந்து நாம் கவனித்து வருகிறோம் என்றும், கடந்த சட்டமன்ற தேர்தலில் எனக்காக எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டதை மறக்க முடியாது என்று சிலாகித்து பேசினார்.

மேலும் அவர் கூறுகையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்ததை பாராட்டி பேசினார்.

மேயர் நா.தினேஷ்குமார் அவர்கள் மஜக-வின் இப்படியான தொடர் சேவைகளை ஊக்குவித்து பேசினார்.

நிகழ்வின் இறுதியாக ஏழை எளியோருக்கு மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கிட் முதல் கட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திமுக மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, துணை மேயர் சிபிஐ ஆர்.பாலசுப்பிரமணி, காங்கிரஸ் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பா.கோபி, ஜமாத்துல் உலமா மாவட்ட தலைவர் நாசர் அலி சிராஜி, பெரிய பள்ளிவாசல் தலைவர் VKM.ஷாஜகான், பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் சல்மான் பாரிஸ் முப்தி, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேலும் மஜக மாவட்ட பொருளாளர் பாபு, துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லா, ஈஸ்வரன், ஷேக் ஒலி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுலைமான், மாவட்ட வணிகர் அணி செயலாளர் நிஜாமுதீன், பொருளாளர் சாகுல், மாணவர் இந்தியா செயலாளர் அசாருதீன், பொருளாளர் ஆசிக், துணைச் செயலாளர்கள் சித்திக் அலி, ரிஹால் ஷெரீப், இப்ராஹிம் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.