வேலூர்.டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா கலந்து கொண்டார். TR.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாணியம்பாடியில் நடக்கவிருக்கும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதில் மாற்று மத சகோதரர் சரவணன் என்பவர் தாமாக முன்வந்து தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். இந் நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் அமீர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான் அஹம்த், நகர தொழில் சஙக அணி செயலாளர் சுஹேப் அஹ்மத், முதஸீர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் ஷாயின்ஷா, ஆகிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 02.12.2017
Author: admin
சீரத்துன் நபி விழா..! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்பு..!!
தஞ்சை.டிச.02. ,தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா உடையநாட்டில் சுபைதா அம்மாள் அரபி கல்லூரியில் ஆண்டு விழாவும், சீரத்துன் நபி விழாவும் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் கல்லூரி தாளாளரும், மலேசியாவில் புகழ்பெற்ற சுபைதா குழுமத்தின் தலைவருமான டத்தோ.அஜீஸ் அவர்கள், மஜக துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி ஸலாம், முன்னாள் தலைமை ஆசிரியர் குலாம், அரபி கல்லூரி முதல்வர் வருசை இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளும், 100க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுக்கு பிறகு ECR சாலையில் உள்ள சேதுபாவாசத்திரம் சென்று அங்கு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட கபர்ஸ்தான் இடத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர். இது குறித்து தொகுதி MLA திரு.கோவிந்த ராஜன் மற்றும் DSP ஆகியோர் கவனத்திற்கு எடுத்து செல்வதாக பொதுச்செயலாளர் அவர்கள் உறுதியளித்தார். அதன் பிறகு சேதுபாவாசத்திரத்தில் பொதுச் செயலாளர் மஜக கொடியை ஏற்றி வைத்தார். இடையில் மரைக்காவலசை மற்றும் உடையநாடு
மஜக பெங்களூரு மாநகர செயல்வீரர்கள் கூட்டம் மாநில பொருளாளர் பங்கேற்பு..!
#மஜக_பெங்களூரு_மாநகர_செயல்வீரர்கள்_கூட்டம்_மாநில_பொருளாளர்_பங்கேற்பு..! பெங்களூர். டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி கர்நாடக மாநிலம் பெங்களூரு நகர செயல்வீரர்கள் கூட்டம் இன்று 02/11/17 ஏர்ப்போர்ட் ரோடு பகுதியில் மாவட்ட செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர துணை செயலாளர் ஹக்கிம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள், மாநகர பொருளாளர் J.சல்மான் முன்னிலைவகிக்க, மாநகர துணைச்செயலாளர் SBS.சாகுல்ஹமீது தொகுப்புரை வழங்க, இக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது M.com, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மவ்லவி J.S.ரிஃபாயி ரஷாதி ஆகியோர் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தினார்கள். இதில் பேசிய மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் பாபர் மசூதி வரலாறு பற்றியும், மசூதி இடிப்பு நடைபெற்றதை பற்றியும், மகஜவின் போராட்டங்கள் பற்றியும் விளக்கமாக கூறினார்கள். மேலும் இந்த டிசம்பர்-6 அன்று இஸ்லாமிய சொந்தங்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்கள், தோழமை கட்சி நிர்வாகிகளையும் அழைத்து போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். இதில் KMMT மாநில தலைவர் முக்தார் அஹ்மத், திப்பு கிராந்தி சேனா மாநில இளைஞர் அணி தலைவர் காலித் கான், K.G ஹல்லி வியாபாரிகள் சங்க தலைவர் அய்யூப் கான்,
ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு மஜக முன்னிலையில் உதவி பொருட்கள் விநியோகம்..!
சென்னை.டிச.01., சவுதிவாழ் தமிழ் சொந்தங்களால் சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை முடிந்த அளவு அத்தியவாசியான பொருட்கள் துணிகள், சோப்பு, பெண்களுக்கு தேவையான பேட், செருப்புகள், போன்ற பல தரப்பட்ட பொருட்களை வாங்கி அதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னையில் உள்ள ரோகிங்கியா இஸ்லாமியர்களுக்கு பிரித்து கொடுக்கும் படி (தாம்பரம் தாரிக்) அவர்களை தொடர்பு கொண்டு சவுதிவாழ் தமிழ் சொந்தங்கள் கேட்டு கொண்டார்கள். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் (29.11.2017) மாலை பொருட்கள் அனைத்தும் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளிடம் வந்து சேர்ந்தது. அதை அமானிதமாக பெற்று கொண்ட மஜக நிர்வாகிகள். நேற்று (30.11.2017) ரோகிங்கியா இஸ்லாமியர்கள் இருக்கும் கேளம்பாக்கத்தில் மஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அந்த பொருட்களை பிரித்து கொடுக்க வேண்டும் என்று அழைக்கும் போது மஜக நிர்வாகிகள் சொன்ன தகவல் கேளம்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு அனைத்து மக்களும் உதவி கரம் நீட்டுகிறார்கள். ஆனால் கேளம்பாக்கத்தை தாண்டி சுமார் 8 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் திருப்போரூர் என்ற இடத்திலும் ரோகிங்கியா இஸ்லாமியர்கள் டென்ட் போட்டு தங்கி ரோடுகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில் கவர் போன்றவற்றை பெருக்கி அதை எடைக்கு
மஜக கோவை கிணத்துக்கடவு பகுதி ஆத்துப்பாலம் கிளை நிர்வாகிகள் தேர்வு..!
கோவை.நவ.30., இன்று மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி ஆத்துப்பாலம் கிளையின் ஆலோசனை கூட்டம் மீனவர் அணி மாநில துணைச் செயலாளர் ஜாபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைச்செயலாளர் அப்துல் பஷீர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர்கள், அபு, ஹாருண் ரஷீது மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் ஆத்துப்பாலம் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளை செயலாளர் J.முகமதுஇஷாக், கிளை பொருளாளர் H.ஷாஜஹான், துணை செயலாளர்கள் A.பைசல்ரஹ்மான் (எ) ராஜா, A.அல் அமீன், S.அப்சல் அன்சாரி, ஆகியோர் மாவட்ட நிர்வாகக்குழு ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 30.11.17.