தஞ்சை.டிச.02. ,தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்கா உடையநாட்டில் சுபைதா அம்மாள் அரபி கல்லூரியில் ஆண்டு விழாவும், சீரத்துன் நபி விழாவும் நடைபெற்றது.
இதில் இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்ற தலைப்பில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்வில் கல்லூரி தாளாளரும், மலேசியாவில் புகழ்பெற்ற சுபைதா குழுமத்தின் தலைவருமான டத்தோ.அஜீஸ் அவர்கள், மஜக துணை பொதுச்செயலாளர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நச்சிக்குளம் தாஜுதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி ஸலாம், முன்னாள் தலைமை ஆசிரியர் குலாம், அரபி கல்லூரி முதல்வர் வருசை இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந் நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவிகளும், 100க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வுக்கு பிறகு ECR சாலையில் உள்ள சேதுபாவாசத்திரம் சென்று அங்கு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்ட கபர்ஸ்தான் இடத்தை பார்வையிட சென்றார். அங்கு அவரை ஜமாத்தார்கள் வரவேற்றனர்.
இது குறித்து தொகுதி MLA திரு.கோவிந்த ராஜன் மற்றும் DSP ஆகியோர் கவனத்திற்கு எடுத்து செல்வதாக பொதுச்செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்.
அதன் பிறகு சேதுபாவாசத்திரத்தில்
பொதுச் செயலாளர்
மஜக கொடியை ஏற்றி வைத்தார்.
இடையில் மரைக்காவலசை மற்றும் உடையநாடு ஜமாத்தார்கள் கொடுத்த கோரிக்கைகளை பெற்று கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தஞ்சை_தெற்கு
02.12.17