மவ்லவி P. ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மார்ச் 26 , மாநாட்டு அழைப்பிதழ் வழங்கப்பட்டது .!

பிரபல மார்க்க அறிஞரும் , தமுமுகவின் முன்னால் அமைப்பாளரும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனருமான அண்ணன் P.ஜெய்னுலாபுதீன் அவர்களுக்கு மஜக சார்பில் அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா . நாசர் அவர்கள் நேரில் வழங்கினார்கள் . அவருடன் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் . ராவுத்தர்ஷா , மாநில செயலாளர் A. சாதிக் பாட்ஷா ஆகியோரும் உடன் சென்றனர் .

20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு நெகிழ்வாகவும் , இனிமையாகவும் அமைந்தது . அனைவரையும் உபசரித்த அண்ணன் அவர்கள் மஜகவின் பணிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து , மாநாடு வெற்றி பெற துவா செய்வதாகவும் கூறினார் .

முன்னதாக ததஜ தலைமையகத்திற்கு சென்று தலைவர் பக்கீர் முகம்மது அல்தாபிக்கும், இதர நிர்வாகிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

– மஜக ஊடகப் பிரிவு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.