இராமநாதபுரம்.டிச.09., கட்சி வளர்ச்சி குறித்த பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று ராமநாதபுரம் வருகை தந்த மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், அங்கு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூற வேண்டும் என்றார். மேலும் கேரளா அரசு அம்மாநிலத்தில் செய்யும் நிவாரண உதவிகளுக்கு இணையாக தமிழக அரசும் செய்ய வேண்டும் என்றார். மேலும், சென்னை அண்ணா சாலையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு சொந்தமான மதரஸா ஆஸம் இருக்கும் 16 ஏக்கர் இடத்தில், முஸ்லிம் சமுதாயத்தை கலந்து ஆலோசிக்காமல் தமிழக அரசு எந்த கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கெண்டார். இப்பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் மண்டலம் ஜெய்னுலாபுதீன், மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், மாநில விவசாயிகள் அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட செயலாளர் இலியாஸ் ஆகியோர் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_மாவட்டம் 09.12.17
Author: admin
ECR சாலையில் போராடிவரும் மீனவர்களுடன் மஜக பொதுச்செயலாளர் சந்திப்பு…!
தஞ்சை. டிச.09., மல்லிபட்டிணத்தில் பத்து நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்த மீனவர்கள் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் போராட்டம் நடத்தினர். இன்று ECR சாலை வழியாக ராமநாதபுரம் சென்ற மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், போராட்டக்காரர்களை சந்தித்து பேசினார். பிறகு, அவர்களின் கோரிக்கையை கேட்டுக்கொண்டு இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசினர். மேலும், மீன் வளத்துறை அதிகரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கு மாறு கோரினார். அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தில் குமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவ பஞ்சாயத்தார்களையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். வானிலை முன்னறிவிப்பு காரனமாக கடலுக்கு போகாத நாட்களுக்கு வாருவாய் இழப்பிற்குறிய ஈட்டுத்தொகையை பெற்றுத்தருவது குறித்து மீன் வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமாரிடம் பேசுவதாக உறுதியளித்தார். இறுதியாக அவர்களிடமிருந்து விடைபெறும்போது, மீனவ சமுதாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதை நினைவு கூர்ந்து தங்களுடைய நன்றிகளை கூறிக்கொண்டார்கள். இந்நிகழ்வுகளின் போது மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரீஸ் மற்றும் மஜக
மதரஸா-இ-ஆஸம் பள்ளி இடம் இடிப்பு தடுத்து நிறுத்தம்..! அனைவரையும் ஒருங்கிணைத்த மஜக..!! பின்னணி தகவல்கள்..!!!
சென்னை. டிச.09., சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள மதரஸா-இ-ஆஸம் பள்ளியை நேற்று இரவு இடிக்க நடந்த சம்பவத்தை மஜக தலைமையில் பொது மக்கள் ஒன்றினைந்து தடுத்தனர். கூடுதலாக நள்ளிரவில் சாலைமறியல் போராட்டத்தையும் நடத்தினர். நள்ளிரவில் இடிக்க போகும் செய்தி கேள்விப்பட்டதும் மஜக மாநில செயலாளர் NA. தைமிய்யா அவர்கள் பொதுச்செயலாளரிடம் தகவலை தெரிவித்துவிட்டு, அனைத்து தரப்புயும் ஒன்று திரட்டினார். நாளை காலை பேசலாம் என காவல்துறை வாக்குறுதியளித்ததால் கலைந்துசென்றனர். இந்நிலையில் இன்று காலை மஜகவின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.MLA., அவர்கள் முதல்வருக்கு இது குறித்து விரிவான தகவல்களை தெரிவித்தார். பிறகு மதியம் பொதுச்செயலாளரை முதல்வரின் தனிச்செயலாளர் கார்த்திக் அவர்கள் தொடர்புகொண்டு அங்கு அரசு சார்பில் இப்போதைக்கு எவ்வித பணிகளும் நடைபெறாது என்ற உத்தரவாதத்தை முதல்வர் தங்களிடம் தெரிவிக்க சொன்னதாக கூறினார். அதனை தொடர்ந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையின் அவர்களும் போனில் பொதுச்செயலாளரை தொடர்புகொண்டு, அங்கு தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் புதிய பணிகள் மேற்கொள்ளப்படாது என்றும், அதன் ஆவணங்கள் சரிபார்க்கப்படு வருவதாகவும் உறுதியளித்தார். அதனடிப்படையில் மஜகவின் முன் முயற்சியில் சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு அழைத்து பேசினார். இச்சந்திப்பில் கூட்டமைப்பு தலைவர் அப்போலோ ஹனிபா,மஜக
கோவையில் மஜகவில் இணையும் போராளிகள்!
கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும் ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து கோவை தெற்கு மாவட்ட தமுமுக முன்னால் பொறுப்புக்குழு செயலாளர் D.பாசித், முன்னால் SDPI நகர தலைவர் B.காதர்மீரான், M.சம்சுதீன், I.முகம்மது அனீபா, M.பரீத்பாபு, முன்னால் தமுமுக திருநீலகண்டர் கிளை செயலாளர் ஷேக்அலிகான், பொருளாளர் A.கலீல் ரஹ்மான், முகம்மதுசலீம், முகம்மது இஸ்மாயில் ஆகியோர் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் 77 வது வார்டு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சிக்கந்தர், ஜுபேர் ஆகியோர் மாநில பொருளாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டர். இந்நிகழ்வில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட அணி நிர்வாகிகள் பைசல், அப்பாஸ், அபு, செய்யது இப்ராஹீம்,
மஜகவின் சார்பில் மேலப்பாளையத்தில் தடையை மீறி டிச_6 ஆர்ப்பாட்டம்!
நெல்லை.டிச.08., நெல்லை கிழக்கு மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் A.கலீலூர்ரஹ்மான் தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் சில மணிநேரத்திற்க்கு முன்பு ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று கூரிய காவல் துறை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுத்தனர். அதையடுத்து நிர்வாகிகள் காவல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடையை மீரி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹ்மது அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் அ.அப்துல் வாகித், இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்லை ஹக்கீம், தலைமை நிலைய செயலாளர் அப்துல் காதர், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஜாகித் சிக்கி, ஆலியப்பா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் களக்காடு நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போரட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் S.ஷேக் இப்ராஹிம், y.வாஸிம் முபாரக், k.சுபேர், S.நவாப் அலி,T.A.முஹம்மது அலி இக்பால், B.K.மீரான் மைதீன் மூலக்கரைப்பட்டி உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை