குமரி. டிச.24., கன்னியாகுமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் சார்பில் 20-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று சிறப்போடு நடைபெற்றது. முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா அம்மா அவர்கள், கேரளா முதல்வர் உம்மன்சாண்டி அவர்கள் என பிரபலங்கள் பங்கேற்று வரும் கிருஸ்துமஸ் சமூக நல்லிணக்க விழா, நாடு தழுவிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்கு மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் எடப்படியார் உள்ளிட்டோருக்கு இவ்வருடம் அழைப்பு விடுத்திருந்தனர், பணிச்சுமை காரணமாக அவர்களால் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில், இவ்வருட சமூக நல்லிணக்க கிருஸ்துமஸ் விழாவிற்கு திரு.TTV. தினகரன், மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஸ்சுமந்திரன் MP, காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் MLA மற்றும் விஜயதரணி MLA ஆகியோர் பங்கேற்றனர். இந்து, முஸ்லிம், கிருஸ்தவ சமூகங்களை சார்ந்த குமரி மாவட்ட பிரமுகர்களும், மீனவ சமுதாய பிரதிநிதிகளும் பல்வேறு கிருஸ்தவ பிரிவுகளை சார்ந்த தலைவர்களும் பங்கேற்று, கிருஸ்துமஸ் விழாவை சமூக நல்லிணக்க விழாவாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... பல்வேறு தரப்பட்ட சமூகங்களை இணைத்து வகுப்புவாதத்தை புறக்கணித்து,
Author: admin
டிசம்பர்- 23 விவசாயிகள் தினம்! வாழ்த்துகளை பகிர்வோம்..!
இன்றைய நாகரீக வளர்ச்சியில் ... எல்லாவற்றையும் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தோன்றினாலும்.. மனிதர்களின் வேலைகளை இலகுவாக்க எண்ணற்ற உபகரணங்கள் வந்தாலும்.. நாம் உண்ணும் உணவு பொருளை விளைவிக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்.. இதில் லாபம் பெரிதாக இல்லையென்றாலும் மண் வளத்தை பக்குவப்படுத்தி மக்கள் நலமுடன் வாழ தன் இரத்தத்தை வேர்வையாக சிந்தி ஊழியம் செய்யும் ஒப்பற்ற ஜீவன்களான விவசாயிகள் தினத்தை நினைவு கூறுவதில் பெருமிதம் கொள்கிறது மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில விவசாயிகள் அணி பிரிவு.! தோழர்களே... ''இந்தியா ஒரு விவசாய நாடு’' என்ற பழம்பெருமையைப் பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கங்கள், விவசாயத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டை மட்டுமல்ல விவசாய பெருமக்களையும் வீழ்ச்சியில்தான் தள்ளிக் கொண்டு உள்ளன.! டெல்லியில் தொடர்ச்சியான விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் போராடிய விவசாயிகள் மீது எண்ணற்ற வழக்குகளை பதிவு செய்து போராட்டத்தை முடக்கிய மோடி தலைமையிலான பாஜக அரசு! அம்பானி அதானிக்கு சேவகம் செய்வதில் தனதுவிசுவாசத்தை காட்டுகிறது.! நினைத்தாலே வேதனை மிஞ்சுகிறது. உண்ண உணவு கொடுக்கும் விவசாயி உணவில்லாமல் எலிக்கறி தின்று மரணிக்கும் அவலம், இன்றும் தொடர்கிறது. பொதுவாக விவசாயத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு போதிய அளவில் இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விரக்தியோடு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மற்றொரு பக்கம், 'விவசாயம் இனி இளைஞர்கள் கைகளில்’
இன்குலாபுக்கு சாகிதிய அகாடமி விருது! இன்குலாப் ஜிந்தாபாத்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வாழ்நாள் முழுக்க மக்களுக்கான கவிஞரக வாழ்ந்து சென்ற பேரா.இன்குலாப் அவர்களின் "காந்தன் நாட்கள்" நூலுக்கு சாகித்ய அகாடமி விருதும், எழுத்தாளன் பூமா வாசுகி மொழி பெயர்ந்த "கசாக்கின் இதிகாசம்" என்ற நூலுக்கு சிறந்த மொழியாக்கத்துக்கான விருதும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பேரா.இன்குலாப் அவர்கள் புது கல்லூரியில் எனது தமிழ் பேராசிரியர் என்பதால் அவரையும்,அவரது முற்போக்கு கொள்கைகளையும், மனிதாபிமான சிந்தனைகளையும் நன்கு அறிவேன். அவரது ஒவ்வொரு எழுத்துகளும் சமூகத்தை உசுப்பிய ஆயுங்கள் என்பதை அனைவரும் அறிவர்.அவர் நமது காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் என்றால் மிகையில்லை. அவர் விருதுகளுக்காக எழுதியவர் அல்லர். தவறு என்றால் யாரையும் அவர் எதிர்ப்பார். எல்லோரும் ராஜராஜ சோழனை புகழும்போது, அவனது மறுபக்கத்தை கண்டறிந்து கண்டனம் செய்த முதல் தமிழ் படைப்பாளி அவர்தான். திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்டு, மார்க்ஸிய களத்தில் வாள் சுழற்றிய அவர் தேவைப்படும் தருணங்களில் கம்யூனிஸ்ட்துகளின் மீதும் அவர் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது மறைவுக்கு பின்னால் உயரிய "சாகித்ய அகடாமி" விருது அவருக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்நாளில் விருதுகளை ஏற்காத அந்த போராளிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதை, அவரது கொள்கைப்படி
ஜெருசலேம் விவகாரம், அமெரிக்காவை கண்டித்து வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டம்..! மஜக மாநில துணை செயலாளர் பங்கேற்பு..!!
வேலூர். டிச.22., இஸ்லாமியர்களின் புனித நகரமான ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகரமாக, அறிவித்த அமெரிக்க அதிபரை கண்டித்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று (22.12.2017) ஜும்மா தொழுகைக்குப் பிறகு ஜமியதே உலமாயே ஹிந்த் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம்
சிறைத்துறை டிஐஜியுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!
கோவை.டிச.22., கோவை மத்திய சிறையில் சில நாட்களுக்கு முன் தமுமுக வை சேர்ந்த இரு சகோதரர்கள் தாக்கப்பட்டனர். அதை தொடர்ந்து மஜக சகோதரர் இம்தியாஸ் அவர்களும் தலைமை காவலர் பூபதி, என்பவரால் தாக்கப்பட்டுள்ளார். இந்த மனித உரிமை மீறலை கண்டித்து மஜக மாநில துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், அவர்கள் சிறைத்துறை டிஐஜி, அவர்களை சந்தித்து சிறையில் சில நாட்களாக சமூக வழக்குகளில் வரும் நபர்கள் தாக்கப்படுவதாகவும் குறிப்பாக காவலர் பூபதி என்பவர் தான் இத்தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அவர் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைசெயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், விவசாயஅணி மாவட்டசெயலாளர் அன்வர், ஆகியோர் கலந்துகொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 22.12.17