கோவை.டிச.14..,
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பாக கோவை மாநகர் முழுவதும் புதிய பாதை என்ற பெயரில் மீட்டர் ஆட்டோ சேவை நடைபெற்று வருகிறது,
MJTS ஆட்டோ ஒன்றில் நேற்று மாலை ஒரு தம்பதியினர் பயணம் செய்யும் போது தன் 10 சவரன் நகை இருந்த கைப் பையை ஆட்டோவிலேயே தவற விட்டு சென்றுவிட்டனர்.
இரவு பணி முடிந்து ஆட்டோவை நிறுத்தும் போது MJTS ஆட்டோ ஓட்டுனரான காளிதாஸ் பின் இருக்கைக்கு பின்னால் கைப்பை இருப்பதை பார்த்து திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள், பணம் உள்ளிட்டவை இருந்துள்ளது, யார் விட்டு சென்றது என்று தெரியாமல் உடனே மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கைப்பையை ஒப்படைத்துள்ளார்.
தாமதமாக தாங்கள் வைத்து இருந்த நகை பையை காணவில்லை என்பதை அறிந்து அந்த தம்பதியினர் தேட தொடங்கியுள்ளனர்.
கோவையை பொருத்த வரை MJTS மீட்டர் ஆட்டோ என்பது அனைவரும் அறிந்து நம்பிக்கையுடன் செல்லும் ஒரு ஆட்டோ, தங்கள் பையை ஆட்டோவில் தான் விட்டுள்ளோம் என்பதை உறுதி செய்து உடனடியாக நண்பர்கள் உதவியுடன் மஜக மாவட்ட அலுவலகம் வந்தடைந்தனர், பின்னர் கைப்பையை ஆட்டோ ஓட்டுனர் காளிதாஸை அழைத்து அவர் மூலமாகவே அந்த நகை பையை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பயணி தவறவிட்ட நகையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுனர் காளிதாஸை அனைவரும் பாராட்டினர்.
இந்நிகழ்வில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் யூசுப், மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் சிராஜ்தீன், ஆகியோர் உடனிருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
13.12.19