கடலூரில் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்தி மஜக நடத்தும் கையெழுத்து இக்கத்திற்கு! திராவிடர் கழகம் ஆதரவு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களுடைய அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கடலூர் வடக்கு மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக தங்களது வீடுகள் மற்றும் நிலங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு அரசியல் தலைவர்கள், சமூக நல செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களிடம், ஆதரவு பெறப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகர் அவர்களை மாநிலத் துணைச் செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், தஞ்சை அகமது கபீர் ,ஆகியோர் சந்தித்து ஆதரவு கோரினர்.

அதை தொடர்ந்து மஜக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கையொப்பமிட்டார்கள் மேலும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு திராவிடர் கழகம் முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முகமது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பாபர் ஒலி, ஆகியோர். பங்கேற்றனர்.