டிச 14.,
மத்திய அரசு தற்போது பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கியுள்ளனர்.
டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் புரட்சி வெடித்துள்ளது.
இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும்.
இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும்.
சிவகங்கையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெரியபள்ளி தலைவர் அன்வர் பாட்ஷா, ஹவ்வாபள்ளி தலைவர் சேக் தாவூத், ஆதம்பள்ளி செயலாளர் ரபீக், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சேக் பகுர்தீன் நகரச் செயலாளர், அல்லாபிச்சை பொருளாலர் மற்றும் பைசல்ரஹ்மான், ஒலிமுகமது, நிஸ்தார், சேக் எமானி, யாசீன் மற்றும் அனைத்து பள்ளி நிர்வாகிகள் ஜமாத்தார்களும் மமக நிர்வாகிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
13.12.19