இராமநாதபுரம். டிச.27., இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான் குளத்தில் ஜமாத்தினர் சார்பில் மீலாது விழா, மதரஸா மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, பள்ளி சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இதுவரை அரசியல் தலைவர்கள்யாரும் இவ்வூரில் அனுமதிக்காத மரபு இருந்தும் நிலையில், முதல் முறையாக மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர், மலேசியா வாழ் பிரமுகர்களும் அதிக அளவில் பங்கேற்க இந் நிகழ்ச்சியில் 300 பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பகல் பொழுதில் மட்டும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA ஆற்றிய உரையின் சுறுக்கம் பின்வருமாறு. பெண்ணுரிமையை நிலைநாட்டிய முதல் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் என்பது உண்மையாகும். பெண்குழந்தைகளை உயிரோடு புதைத்த அரேபியர்கள், நபிகள் நாயகத்தின் போதனையில் மனம் மாறினர். அவர் பெண் குழந்தைகளை கொல்வதை தடை செய்தார்கள். மூன்று பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு திருமணமும் செய்து கொடுத்தால் சுவர்க்கம் உறுதி என்றார்கள். பெண்களுக்கு தந்தையின் சொத்தில் பங்குண்டு என்றார்கள். முன்னுரிமை என்றபோது முதல் மூன்று இடங்களை தாய்க்குத்தான் கொடுத்தார்கள். பிறகுதான் தந்தைக்கு கொடுத்தார்கள். ஹீதைபியா உடன்படுக்கையின் போது ஹஜ் செய்ய
Author: admin
சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!
கோவை.டிச.28., கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாவட்ட சூற்றுச்சூழல் அணியின் மாவட்டசெயலாளர் AK.முஹம்மது சலீம், துணை செயலாளர் அபு, மாணவர் இந்தியா மாவட்டசெயலாளர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் சந்தித்தனர். அப்போது தொகுதியின் அடிப்படை பிரச்சனைகளான சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மழைநீர் வடிகால், ரேஷன் பொருட்கள், வினியோகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட MLA, அவர்கள் விரைவில் இப்பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய நேரில் வருவதாகவும், வரும் போது தங்களையும் அழைப்பதாகவும் கூறினார். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 28.12.17
மஜக அவைத்தலைவர் நாசிர் உமரி அவர்களின் இல்ல திருமணம்..! மாநில பொருளாளர் நேரில் வாழ்த்து..!!
வேலூர்.டிச.28., மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசிர் உமரி அவர்களின் மகளுக்கும், வேலூர் கிழக்கு மாவட்டம் முன்னாள் இளைஞரணி மாவட்ட செயலாளர் முஹம்மத் சலீம் அவர்களுக்கு இன்று (28/12/17 வியாழன்) திருமணம் நடைபெற்றது.. இத்திருமண நிகழ்வில் மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com, திருமணத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். இந் நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், வேலூர் கிழக்கு மாவட்ட பொருப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசின், சைய்யத் உசேன், மு.மாவட்ட துணை செயலாளர் நூருல்லாஹ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரஃபிக் ரப்பானி மற்றும் மு.மாநகர செயலாளர் தாஜீத்தின் அஸ்கர், வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் நவாஸ் மற்றும் மு.மாவட்ட , மாநகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING, #வேலூர்_கிழக்கு_மாவட்டம்
பெங்களூரு வருகை தந்த TTV.தினகரன் அவர்களுடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு..!
பெங்களூர்.டிச.28., கர்நாடகா மாநிலம் பெங்களூர் வருகை தந்த திரு.TTV. தினகரன் MLA அவர்களை மனிதநேய ஜனநாய கட்சி (மஜக) பெங்களூரு நிர்வாகிகள், மாநகரச் செயலாளர் K.M.J.பாபு அவர்கள் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். திரு.தினகரன் அவர்களுக்கு கர்நாடகா மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். உடன் மஜக கர்நாடகா பெங்களுரு மாநகர பொருளாளர் சல்மான் துணைச்செயலாளர் A.அக்கிம் சேட் , தகவல் தொழில்நுட்பம் அணி துணை செயலாளர் அந்தோனி தாஸ் மற்றும் மஜக செயல்வவீரர்கள் உடன் இருந்தனர். இச்சந்திப்பில் RK.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இமலாய வெற்றி பெற்றதர்க்கு கர்நாடக மஜக சார்பாக வாழ்த்துக்கள் கூறினர். அச்சமயம் திரு TTV.தினகரன் அவர்கள் வரும் காலங்களில் கர்நாடக மஜக சிறப்பாக செயல்படவும், பெரும் வளர்ச்சி பெறவும் கர்நாடக பெங்களூர் மாநகர செயலாளர் K.M.J.பாபுவிடம் வாழ்த்து கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_KARNATAKA #MJK_IT_WING 28-12-2017
முத்தலாக் வரைவு சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்..! மஜக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..!!
திருவாரூர்.டிச.28., இன்று திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது கூறியாதவது. முத்தலாக் குறித்து மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள வரைவுதிட்டத்தை ஆரம்ப நிலையிலேயே திரும்ப பெற வேண்டும். இது குறித்து அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து பேச வேண்டும். தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும், மதசார்பற்ற கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்களை தொடர்புக்கொண்டு தான் பேசி வருவதாகவும் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம்