மானிய கோரிக்கை விவாதத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை இந்த அவையில் ஏற்கனவே நான் வரவேற்றுள்ளேன். இக்கோரிக்கை குறித்து நான் 3 முறை இந்த அவையில் வலியுறுத்தி பேசியுள்ளேன். அரசின் இந்த அறிவிப்புக்காகத்தான் மக்கள் போராடினார்கள். எனவே காவிரி, ஹைட்ரோ கார்பன் -மீத்தேன் எதிர்ப்பு ஆகியவற்றுக்காக அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் போராடி உள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை எல்லாம் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியதும் உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு காமராஜ் அவர்கள் எழுந்து சில விளக்கங்களை கூறி, இது குறித்து முதல்வர் பரிசீலிப்பார் என்று கூறினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்
Author: admin
சாதி வாரி மக்கள் தொகைகணக்கெடுப்பு தேவை! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
சென்னை.மார்ச்.21., இன்று சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வரலாற்று சிறப்பு மிகு கோரிக்கை ஒன்றை சட்டசபையில் எழுப்பினார். அவர் பேசியதாவது... ஆங்கிலேயர் ஆட்சியில் 1931-ஆம் ஆண்டு கடைசியாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 1927 முதல் 1950 வரை 100 சதவீத இடஓதுக்கீடு அமலில் இருந்தது. அது மீண்டும் தேவை. அதுதான் உண்மையான சமூக நீதியாகும். இட ஒதுக்கீடு பெறும் சமூகங்கள் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் அதை பெறுகிறதா? என்பதற்கு அதுதான் அளவு கோலாக இருக்க முடியும். 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் "சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்" என கூறியுள்ளது. இதை உணர்ந்ததால் தான் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி மஹாராஷ்டிரா சட்டப்பேரவையிலும், 11-ஆம் தேதி ஒரிசா சட்டப்பேரவையிலும் "2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். இந்தியா முழுக்க சுமார் 7200-க்கும் அதிகமான சாதிகள் இருப்பதாக பல மாநில அரசுகள் கூறியுள்ள நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில், பொருளாதரத்தில் சமூக நீதி
கொரோனா பரபரப்பு.! சித்தவைத்தியர்களை அழைத்து தமிழக அரசு பேசவேண்டும்! சட்டசபையில் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
சென்னை.மார்ச்.21., இன்று சட்டப்பேரவையில் மு.தமிமுன் அன்சாரி MLA., பேசியதாவது... நமது பாரம்பரிய சித்த வைத்தியர்கள் சிறப்பான மருத்துவ பயன்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அவர்களை தமிழ் மருத்துவர்கள் அல்லது பாரம்பரிய வைத்தியர்கள் என்றோ பட்டமிட்டு அழைக்க தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அது போல, கொரோனா வைரஸ் தொடர்பாக அவர்களை அரசு அழைத்து பேச வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே டெங்கு, சிக்கன் குன்யா நோய்களுக்கு அவர்கள் தான் பப்பாளி இலை, நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை மருத்துவ தீர்வாக அளித்ததை நினைவூட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த சித்த மருத்துவரான தணிகாச்சலம் அவர்கள் வைரஸ் காய்ச்சல் குறித்து தனது மருத்துவ அறிக்கையை ஐ.நா-வில் சமர்பித்திருக்கிறார். அவரையும் அழைத்து, National institute of Siddha Science நிறுவனத்துடன் இணைந்து, சித்த வைத்தியர்களையும் அழைத்து பேச வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியதும், சுகாதரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எழுந்து இவற்றை நல்ல, அரிய ஆலோசனைகள் என்று வரவேற்று அது குறித்த விபரங்களை விளக்கி பேசினார். தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 21-03-2020
சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவர்களின் கடன்களை திருப்பி செலுத்த அவகாசமளிக்க வேண்டும் ஆட்சியரிடம் மஜக சார்பில் நேரில் மனு!
திருச்சி. மார்ச் 21, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்.. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் குறித்த அச்சத்தின் விளைவாக மக்கள் வெளியே வருவது குறைந்து அதை சார்ந்து வாழும் அமைப்பு சார தொழிலாளர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தினசரி வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் இத்தகையோர் தங்கள் தொழில் தேவைக்காக மகளிர்/ஆடவர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கூட்டுறவு/தேசிய வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களையும் திருப்பி செலுத்த கூடுதல் காலத்தவணை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி வட்டி வசூல் செய்யும் தனிநபர்களையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மக்களுக்கு உதவி செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவை எனில் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை முழுமையாக படித்த மாவட்ட ஆட்சித் தலைவர், இது நல்ல கோரிக்கை எனவும், நிச்சயம் மக்களுக்கு பயன்தரும் வகையில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுர பரப்புரை.! முதமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்..!
சென்னை.மார்ச் 20, இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுர பரப்புரையை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார். சென்னை ஐஸ் அவுஸில் நடைப்பெற்ற நிகழ்வில், அங்கு நின்றிருந்த மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியும், முக கவசங்களை விநியோகித்தும் பரப்புரையை தொடங்கி வைத்தார். அவரோடு துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, இளைஞர் அணிச் செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் தாரிக் ஆகியோரும் பங்கேற்றனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது... கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக பொருளாதாரமே சீர்குலைந்துள்ளது. நமது நாடும் இதில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிரதமர் கூறிய அறிவுரைகள் முக்கியமானது. அது போல் தமிழக அரசும் முன் எச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. விழிப்புணர்வு கருதி அவற்றை நாம் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். அதோடு மக்களும் இந்த விழிப்புணர்வு பணியில் தன்னார்வத்தோடு ஈடுபட வேண்டும். தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் முதலாவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று இப்பரப்புரையை தொடங்கி உள்ளோம். போப் ஆண்டவர் இருக்கும் வாட்டிகன் தேவாலயம், புனித மெக்கா, திருப்பதி கோயில் ஆகிய இடங்களில் மக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.