சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டவர்களின் கடன்களை திருப்பி செலுத்த அவகாசமளிக்க வேண்டும் ஆட்சியரிடம் மஜக சார்பில் நேரில் மனு!

திருச்சி. மார்ச் 21,
இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில்..

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நோய் குறித்த அச்சத்தின் விளைவாக மக்கள் வெளியே வருவது குறைந்து அதை சார்ந்து வாழும் அமைப்பு சார தொழிலாளர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

தினசரி வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் இத்தகையோர் தங்கள் தொழில் தேவைக்காக மகளிர்/ஆடவர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக கூட்டுறவு/தேசிய வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்களையும் திருப்பி செலுத்த கூடுதல் காலத்தவணை அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினசரி வட்டி வசூல் செய்யும் தனிநபர்களையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மக்களுக்கு உதவி செய்ய மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவை எனில் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனுவை முழுமையாக படித்த மாவட்ட ஆட்சித் தலைவர், இது நல்ல கோரிக்கை எனவும், நிச்சயம் மக்களுக்கு பயன்தரும் வகையில் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும், மனிதநேய ஜனநாயக கட்சியின் தன்னார்வலர்களை வெகுவாக பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் தேவை எனில் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வதாகவும் கூறினார்.

தொடர்ந்து நடைப்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாவட்ட பொருளாளர் பேரா. மைதீன் அப்துல் காதர் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்.

இதில் MJTS தொழிற் சங்க தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் சையது முஸ்தபா, பொருளாளர் ஷேக் அப்துல்லா, மஜக பகுதி செயலாளர்கள் ஆழ்வார்தோப்பு காதர், முகமது பீர்ஷா, மற்றும் நிர்வாகிகள் ஜம்ஜம் பஷீர், சேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மஜக சார்பில் மதுக்கடைகளை மூடச் சொல்லி முன்னரே மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.