சென்னை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி துறைமுகம் பகுதி - என்.எஸ்.சி போஸ் ரோட்டில் 71 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் கொடி ஏற்றி வைத்து சிறப்புறையாறினார் மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா M.sc. அவர்கள் முன்னிலை வகித்தார். சுதந்திர தின முழக்கம் எழுப்பப்பட்டன. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டு சுதந்திர தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாணவர் இந்தியா மாநிலச் செயலாளர் அஜாருத்தீன், மாநிலத் துணைச் செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் பங்கேற்றனர். வடசென்னை மாவட்ட நிர்வாகிகளான தாஹா, அன்வர், மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் பிஸ்மல்லாஹ் கான், துணைச் செயலாளர் பீர் முஹம்மது, வர்த்தகர் அணிச் செயலாளர் அப்பாஸ், தொழிலாளர் அணிச் செயலாளர் மூஸா, திருவள்ளூர் கி மாவட்ட பொருளாளர் ஜாபர் உட்பட நிர்வாகிகள் மற்றும் மனிதநேயச் சொந்தங்கள் திரளானோர் பங்கேற்றனர். துறைமுக பகுதி செயலாளர் குப்பை சீனி முஹம்மது, துறைமுக பகுதி பொருளாளர் காஜா மொய்தீன், துணைச் செயலாளர்கள் : அலிப் கான், பஜார் அப்பாஸ் , அபூபக்கர், மாணவர் இந்தியா மத்திய சென்னை மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாணவர்
Author: admin
மஜக-வின் வேலூர் (மே)மாவட்ட சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
வேலூர்.ஆகஸ்ட்.15., இன்று இந்திய திருநாட்டின் 71-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் மேற்கு மாவட்டம் சார்பாக ஆம்பூரில் தேசிய கொடி ஏற்றம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் T.D.அப்ரோஸ் அஹமத் தலைமையில் நடைபெற்றது. அன்பை விதைத்து! அமைதி காத்து! வேற்றுமை மறந்து! ஒற்றுமை பேணி! வளமிக்க தாயகத்தை! ஒன்றுபட்டு கட்டமைப்போம்! என்ற வீரிய முழக்கத்தோடு தேசிய கொடியை வேலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் S.M.D.நவாஸ் அவர்கள் ஏற்றி வைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பள்ளிக்கூடங்களில் படிக்கின்ற ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அக்பர் பாஷா, 1-வது வார்டு கிளை செயலாளர் ஷயின்ஷா, நிர்வாகிகள் ஜமாலுத்தீன், அஸ்கர் அலி, முபாரக், எதிஷாம்,நகர கிளை நிர்வாகிகள் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர். தகவல்:- #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING ஆம்பூர் நகரம் வேலூர் (மே) மாவட்டம் 15/08/2017.
எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற மதுரை வடக்கு மாவட்ட மஜக -வின் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
மதுரை.ஆகஸ்ட்.15., இன்று இந்திய திருநாட்டின் 71- வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனிதநேய ஜநையக கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக கருப்பாயூரணி பகுதியில் மாவட்ட செயலாளர் பி.எம்.சேக் அகமது அப்துல்லா அவர்கள் தேசிய கொடியை ஏற்றி் வைத்தார். இந்நிகழ்ச்சி மஜக மாவட்ட துணைசெயலாளர் வழக்கறிஞர் A.ஜமாலுதீன், மாவட்ட துணை செயலாளர் கருப்பாயூரணி K.ஷாஜகான், இளைஞர் அணி அலாவுதீன், மாணவர் இந்திய செயலாளர் k.ஜபருல்லா, ஒன்றிய செயலாளர்.M.அப்பாஸ், கிளை செயலாளர் M.அமானுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மஜக கீழநாச்சிகுளம் பகுதியில் மாவட்ட துணை செயலாளர் நாகூர் அனிபா தேசிய கொடி ஏற்றினார். ஒன்றிய செயலாளர் சலீம் ஆகியோருடன் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த இரண்டு இடங்களில்ளும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தகவல்:- தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி மதுரை வடக்கு மாவட்டம். #MJK_IT_WING 15/08/2017.
மஜக சார்பில் காயல்பட்டினத்தில் 71வது சுதந்திரதின விழா கொடியேற்றம் நிகழ்ச்சி..!
தூத்துக்குடி.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் நகரத்தின் சார்பாக 71வது சுதந்திர தின நிகழ்ச்சி இன்று காலை 8.30 மணியளவில் காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர நிர்வாகிகள் தலைமையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஹாஃபில் அகம்மது மீரா தம்பி அவர்கள் கொடியை ஏற்றி வைத்தார்கள். அதன் பிறகு நாட்டு பற்றுள்ள உணர்ச்சி ஊட்டும் முழக்கங்களை நகர துணை செயலாளர் ஜியாவுதீன் அவர்கள் எழுப்பினார். கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் A.ஜாகிர் உசேன் அவர்கள் சுதந்திரதின உரை நிகழ்த்தினார். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது நஜிப், மாவட்ட MJTS செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகம்மது சபீர, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் சதாம், நகர செயலாளர் ஜிப்ரி, நகர பொருளாளர் மீரான், நகர துணை செயலாளர்கள் மொகுதும், சாகுல் ஹமீத், பக்கிர் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம். 15.08.2017.
நாகை தொகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள்! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு!
நாகை. ஆக.15.,71 வது சுந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் தமிழகமெங்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தேசிய கொடியேற்றல், மரக்கன்றுகள் நடல், ரத்ததான முகாம்கள், மருத்து சேவை நிகழ்ச்சிகள் என மஜகவினர் கொண்டாடினர். மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி அவர்கள், நாகை கலெக்டர் அலுவகத்தில் நடைப்பெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பிறகு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முழக்கங்களுக்கு இடையே சுதந்திர தின தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். பிறகு நாகை புதுத்தெருவில் காயிதேமில்லத் நற்பணி மன்றம் சார்பில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நாகை நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றினார். பிறகு யாஹுசைன் பள்ளித்தெரு வில் மஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்சியில் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றினார். பிறகு நாகூரில், நகராட்சி இஸ்லாம் நடுநிலைப்பள்ளியில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பிறகு விடுதலைப் போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர் தெருவில் இளைஞர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு அவர்களது